Pazhamudircholai Murugan Temple 6th Padai Veedu Benefits : முருகப்பெருமானின் ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள், அவ்வையார் கண்ட ஞான ரகசியம் மற்றும் அங்கு வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
ஆறுபடை வீடு என்றால் என்ன?
சூரபத்மனை அழிக்கப் போர்க்கோலம் பூண்டு, தனது படைகளுடன் தங்கியிருந்த ஆறு இடங்களைக் குறிக்கிறது. இது 'ஆற்றுப்படை வீடு' என்பதன் மருவி, முருகனின் ஆறுபடை வீடுகள் கருதப்படுகிறது. இந்த ஆறு தலங்களும் மனித உடலின் ஆறு ஆதாரங்களையும் மூலாதாரம் முதல் ஆக்கினை வரை குறிக்கின்றன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை.
அறுபடை வீட்டின் அதிபதி:
தமிழ் கடவுள் என்றாலே அது முருகன் தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும் அவருக்கு மிகச் சிறப்பான கோயில் அறுபடை வீடு என்றும்அனைவருக்கும் தெரியும். இந்த அறுபடை வீட்டுக்கு சொந்தக்காரரும் முருகன் தான். முருகன் என்றாலே குன்றியிருக் இடமெல்லாம் இந்த குமரன் இருப்பான். என்ற பழமொழிக்கு ஏற்ப முருகன் மழையிலேயே அமர்ந்திருக்கிறார். அப்பன் சிவ னை விட அதிக அளவில் முருகற்கு பக்தர்கள் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளும் மனித உடலில் உள்ள ஆறு சக்கரங்களை குறிப்பதாகும்.
ஆறாம் படை வீடு-பழமுதிர்ச்சோலை: முருகனின் ஆறாம் படை வீடு பழமுதிர் சோலையை கூறப்படுகிறது. முருகப்பெருமான் இம்மலை இயற்கை வளத்தால் பசுங்காடும் சோலையும் நிறைந்து காணப்படுகிறார் கண்களுக்கு பசுந்தலைகளால் போர்த்தப்பட்ட இனிய தோற்றத்துடன் காணப்படுவதால் பல முதல் சோலை என்று பெயர் வந்தது. முருகன் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலிக்கின்றார். பலன்கள்: இக்கோயிலுக்கு சென்று வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும் என்றும் சகல ஐஸ்வர்யமும் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.
