MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ராம் சரணின் பெத்தி படம் தள்ளிப்போகிறது... காரணம் என்ன தெரியுமா?

ராம் சரணின் பெத்தி படம் தள்ளிப்போகிறது... காரணம் என்ன தெரியுமா?

ராம் சரண் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது பெத்தி. புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் மார்ச் 27-ந் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில், அதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 24 2026, 02:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Peddi Movie Postponed
Image Credit : Asianet News

Peddi Movie Postponed

ராம் சரண் தற்போது 'பெத்தி' படத்தில் நடிக்கிறார். 'கேம் சேஞ்சர்' தோல்விக்கு பின், இப்படத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை புச்சி பாபு சனா இயக்குகிறார். 'பெத்தி' படத்தின் 'சிகிரி' பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. கோடை விடுமுறையை முன்னிட்டு மார்ச் 27 அன்று இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. அப்போது தேர்வுகள் முடிந்துவிடும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழு நம்பியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தள்ளிப்போகும் பெத்தி
Image Credit : MythriMovieMakers\Twitter

தள்ளிப்போகும் பெத்தி

ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் தகவலின் படி 'பெத்தி' படம் தள்ளிப்போவதாகக் கூறப்படுகிறது. சித்தப்பா பவன் கல்யாணின் 'உஸ்தாத் பகத் சிங்' படத்திற்காக ராம் சரண் பின்வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'பெத்தி' மற்றும் 'உஸ்தாத் பகத் சிங்' படங்களை ஒரே நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. சித்தப்பாவுக்காக ராம் சரண் விட்டுக்கொடுப்பார் என்பதால், 'பெத்தி' தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்த ராம் சரண்; ரிலீசுக்கு முன்பே 130 கோடி வசூல் குவித்த Peddi!!
Related image2
Ram Charan Peddi First Single : ராம் சரண் பீடி டான்ஸ், ரஹ்மான் பீட்ஸ், எல்லை மீறிய ஜான்வி டான்ஸ்
34
காரணம் என்ன?
Image Credit : X/@MythriOfficial

காரணம் என்ன?

'பெத்தி' தள்ளிப்போக மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடியாததால், திட்டமிட்ட தேதியில் வெளியிடுவது கடினம். இதனால் 'உஸ்தாத் பகத் சிங்' அந்த தேதியில் வரலாம். 'உஸ்தாத் பகத் சிங்' படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். 'ஓஜி' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பவன் கல்யாணின் மார்க்கெட் விரிவடைந்துள்ளது. இது 'உஸ்தாத் பகத் சிங்' படத்திற்கு பெரிய பலமாக அமையும்.

44
ஏ.ஆர்.ரகுமான் கம்பேக்
Image Credit : X/@vriddhicinemas

ஏ.ஆர்.ரகுமான் கம்பேக்

பெத்தி திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு படங்கள் எதிலும் பணியாற்றாமல் இருந்து வந்த அவர், தற்போது பெத்தி மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கில் பாடலான சிகிரி வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையகிளப்பியதை போல் படமும் தூள் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராம் சரண்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Peddi Review : ராம்சரணின் பெத்தி படம் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Aamir Khan: 61 வயதில் திருமணத்திற்கு தயாராகும் ஆமிர் கான்..! VVIPகளுக்கு மட்டும் தான் அழைப்பாம்..
Recommended image3
Ethirneechal Thodargiradhu : கம்பி எண்ணப்போகும் ஜனனி... தர்ஷினியால் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்த ராம் சரண்; ரிலீசுக்கு முன்பே 130 கோடி வசூல் குவித்த Peddi!!
Recommended image2
Ram Charan Peddi First Single : ராம் சரண் பீடி டான்ஸ், ரஹ்மான் பீட்ஸ், எல்லை மீறிய ஜான்வி டான்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved