- Home
- Spiritual
- வெள்ளை அல்ல கருப்பு விபூதி! காளிப்பட்டி கந்தசாமி கோயிலின் மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயம்!
வெள்ளை அல்ல கருப்பு விபூதி! காளிப்பட்டி கந்தசாமி கோயிலின் மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயம்!
Kalippatti Kandaswamy Temple Black Vibhuti Benefits in Tamil : நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் ஏன் கருப்பு விபூதி வழங்கப்படுகிறது? அதன் மருத்துவ குணங்கள் மற்றும் ஆன்மீக ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

முருகன் கோயிலின் விபூதி
Kalippatti Kandaswamy Temple Black Vibhuti Benefits in Tamil : முருகன் கோயிலின் விபூதி எங்கும் காணாத வகையில் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் கருப்பு வண்ண விகுதியாக காட்சியளிக்கப்படுகிறது இந்த விபூதியை எந்த ஒரு விஷக்கடிக்கும் பூசினால் விஷம் தீர்ந்து உயிர் பிரிக்கலாம் என்று கூறப்படுகிறது இந்த கோயிலில் ஆசிரியர்களும் சுவாரசியங்களும் அதிசயமும் உருவாகி இருப்பதால் இந்த கோயிலின் முழு விபத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசாமி திருக்கோவில், 18-ஆம் நூற்றாண்டில் பழனி கவுண்டரால் நிறுவப்பட்டு, லட்சுமண கவுண்டரால் கட்டப்பட்ட முருகனின் பழமையான மற்றும் பணக்காரக் கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
காளிப்பட்டி கிராமம்:
பசுமையான வயல் வெளிகளும்,தென்றல் வீசும் கிராமது காற்று,விண்ணை தொடும் மலைகள் நிறைந்த பகுதியில் கண்ணுக்கு விருந்தாய், கம்பீரமாய் காட்சியளிக்கிறது கந்தசாமி கோயில் காயில். ஊர் மக்கள் இந்த கந்தசாமி கோயிலுக்கு வருஷத்துக்கு இரண்டு முறை விளைந்த பொருட்களையே தானமாக படைக்கின்றனர் கரும்பு தேங்காய் இன்று கந்தசாமிக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன
கருப்பு வண்ண விபூதி:
கந்தசாமி சன்னிதியில் விபூதிக்கு பதிலாக கரும்பு சக்கைகளை எரித்து தயாரிக்கப்பட்ட சாம்பல்தான் பிரசாதமாக இங்கு வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் மருத்துவ குணங்கள் கொண்டதாக கருதப்படுகிறது. இதனை அருமருந்து என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள். கரிய நிறத்தில் மணல் போல இது இருக்கும். இந்த பிரசாதம் தயாரிக்க சுற்றிலும் உள்ள கரும்பு விவசாயிகள் தாங்களே முன்வந்து கோவிலுக்கு கரும்புகளை தந்து மகிழ்கிறார்கள். பக்தர்கள், தங்கள் நிலத்தில் கரும்பு பயிரிட்டதும் நாங்கள் கோயிலுக்கு விபூதியாக கொண்டுவந்து தருகிறோம் எனக் கூறுவார்.
சிலர் நேர்த்திக்கடன் ஆகவும் இங்கு கரும்புகளை கொடுப்பார்.அதன்படி விரதமிருந்து, கரும்பு சக்கைகளை எரித்து கிடைக்கும் சாம்பலை சுத்தப்படுத்தி, கோவிலில் கொடுக்கின்றனர். இப்படி பக்தியுடன் கொடுக்கப்படும் சாம்பலை, மூலவர் முன் வைத்து சிறப்பு பூஜை செய்து, வேறு எந்த கலப்பும் செய்யாமல், அப்படியே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மணம் எதுவும் இல்லாத இந்த பிரசாதம் மனிதர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளின் நோய்களையும் தீர்க்கும் மகத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
கோவிலின் அமைப்பு:
மூலவராக இருப்பவர் முருகப்பெருமான் கந்தசாமி என்னும் பெயரில் நின்று கொண்டிருக்கும் வடிவில் அருள்பாலிக்கின்றார். ஐந்துநிலை கொண்ட ராஜ கோபுரம் உள்ளது.கோவிலின் வெளியே வடக்குப் பகுதியில் இடும்பன் சன்னிதி உள்ளது. அதைத்தொடர்ந்து விநாயகர் சன்னிதி காணப்படுகிறது. சனீஸ்வரர், வேலாயுதசாமி உபசன்னிதிகளும் உள்ளன