- Home
- Sports
- Sports Cricket
- T20 World Cup 2026: தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட வங்கதேசம்.. ஸ்காட்லாந்துக்கு ஜாக்பாட்!
T20 World Cup 2026: தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட வங்கதேசம்.. ஸ்காட்லாந்துக்கு ஜாக்பாட்!
டி20 உலகக்கோப்பை 2026 அப்டேட்: இந்தியாவில் விளையாட மறுத்ததால், டி20 உலகக்கோப்பையில் இருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்தை ஐசிசி அதிகாரப்பூர்வமாகச் சேர்த்துள்ளது. முழு விவரம் என்ன, ஸ்காட்லாந்தின் வருகையால் என்ன மாறும்?

டி20 உலகக்கோப்பையில் இருந்து வங்கதேசம் ஏன் வெளியேறியது?
பாதுகாப்பு கவலைகள் காரணமாக, ஐசிசி திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) கூறியது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்காவிட்டால், வேறு அணி சேர்க்கப்படும் என ஐசிசி எச்சரித்தது.
ஜெய் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்
துபாயில் ஜெய் ஷா தலைமையில் நடந்த ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. போட்டி அட்டவணையை கருத்தில் கொண்டு இனியும் காத்திருக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வங்கதேசத்தின் மேல்முறையீட்டு கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் புறக்கணிப்பு முடிவு
ஐசிசியின் எச்சரிக்கைக்குப் பிறகு, வீரர்களுடன் ஆலோசித்து, டி20 உலகக்கோப்பை 2026-ஐ புறக்கணிப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனால் மாற்று அணி உறுதியானது.
ஸ்காட்லாந்துக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது?
வங்கதேசம் விலகியதால் ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த இரண்டு உலகக்கோப்பைகளிலும் (2022, 2024) சிறப்பாக விளையாடியது. ஐசிசி தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து தேர்வு செய்யப்பட்டது.
ஸ்காட்லாந்து எந்த குரூப்பில் விளையாடும்?
வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து குரூப் C-ல் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, நேபாளம் அணிகள் உள்ளன. ஸ்காட்லாந்து தனது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது.

