- Home
- Politics
- பாஜக அரசுக்கு ஆதரவு... என் முடிவில் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. காங்கிரஸ் கட்சிக்கு சசி தரூர் பதிலடி..!
பாஜக அரசுக்கு ஆதரவு... என் முடிவில் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. காங்கிரஸ் கட்சிக்கு சசி தரூர் பதிலடி..!
பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு ஒரு பார்வையாளராகவும், எழுத்தாளராகவும் ஒரு செய்தித்தாள் கட்டுரையை எழுதினேன். அதில் தண்டனை மற்றும் உறுதியான நடவடிக்கைக்காக வாதிட்டேன். இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி ஊகங்களுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் ‘கட்சி எல்லைகளை ஒருபோதும் மீறவில்லை’ என காங்கிரஸ் எம்.பி. சனி தெளிவுபடுத்தியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு, பயங்கரவாதத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை முன்வைக்க அமெரிக்காவிற்கு இந்தியாவின் தூதுக்குழுவை வழிநடத்தியபோது, தனது ஒரே பொது சித்தாந்த வேறுபாடு ஆபரேஷன் சிந்தூர் பற்றியது என சசிதரூர் வலியுறுத்தி உள்ளார்.
வெள்ளிக்கிழமை, கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மூத்த காங்கிரஸ் தலைவரான சசிதரூர், மாநிலத் தலைமையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட குழுவின் ஒரு முக்கியமான கட்சிக் கூட்டத்தைத் தவிர்த்தார். இதனையடுத்து சசிதரூர் இனி கட்சிக்கு அவசியமானவர் இல்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தீப் தீட்சித் உட்பட காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். இதனால், காங்கிரஸ் கட்சியில் விரிசல் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் காங்கிரஸ் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளாததற்கு விளக்கமளித்த திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர், ‘‘பகிரங்கமாக விவாதிப்பதை விட, கட்சித் தலைமையிடம் நேரடியாக கவலைகளை எழுப்புவது நல்லது’’ என்று கூறினார்.
கேரள இலக்கிய விழாவில் கேள்விகளுக்கு பதிலளித்த சசிதரூர், ‘‘ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் நான் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளேன். மன்னிப்பு கேட்க மாட்டேன். நாடாளுமன்றத்தில் எந்த மட்டத்திலும் காங்கிரஸ் நிலைப்பாட்டை மீறவில்லை. கொள்கை அடிப்படையில் நான் பகிரங்கமாக உடன்படாத ஒரே பிரச்சினை ஆபரேஷன் சிந்தூர். அதில் நான் மிகவும் வலுவான நிலைப்பாட்டை எடுத்தேன். அதைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
ஊடகங்களில் பல விஷயங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் சில உண்மையாக இருக்கலாம். சில உண்மையாக இல்லாமல் இருக்கலாம். இதுபோன்ற விஷயங்களை பொது மேடைகளில் விவாதிக்கக்கூடாது. காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமை குறித்து கட்சிக்கு முன்கூட்டியே தெரிவித்து விட்டேன். நான் என்ன சொல்ல வேண்டுமோ அதை கட்சிக்குள் கூறுவேன்.
பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு ஒரு பார்வையாளராகவும், எழுத்தாளராகவும் ஒரு செய்தித்தாள் கட்டுரையை எழுதினேன். அதில் தண்டனை மற்றும் உறுதியான நடவடிக்கைக்காக வாதிட்டேன். இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. பாகிஸ்தானுடன் நீடித்த மோதலில் இழுக்கப்படக்கூடாது. எந்தவொரு நடவடிக்கையும் பயங்கரவாத முகாம்களை குறிவைப்பதில் மட்டுமே இருக்க வேண்டும்’’ என்றும் அவர் கூறினார்.
