இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வடகிழக்கு பருவமழை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, தங்கம் வெள்ளி விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

09:37 AM (IST) Jan 17
S2 E691 Pandiyan Stores 2: தங்க மயிலின் மோசடி அம்பலமானதால், பாண்டியன் குடும்பத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. இனி தங்க மயிலுக்கும் சரவணனுக்கும் எந்த உறவும் இல்லை என பாண்டியன் அதிரடி முடிவு எடுத்து, அவரிடம் மன்னிப்பும் கேட்கிறார்.
09:26 AM (IST) Jan 17
தை அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய ராமேசுவரம் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, சேலம், கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து ராமேசுவரத்திற்கு இன்று மற்றும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
08:45 AM (IST) Jan 17
அக்டோபரில் கனமழையுடன் தொடங்கிய வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் நிறைவு பெறுகிறது. நவம்பர், டிசம்பரில் எதிர்பார்த்த மழைக்கு பதிலாக பனிப்பொழிவு நிலவிய நிலையில், இனி வரும் நாட்களிலும் வறண்ட வானிலையுடன் லேசான பனிமூட்டம் காணப்படும்.
07:59 AM (IST) Jan 17
பிக் பாஸ் சீசன் 9 அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் கவின் மற்றும் சாண்டி மாஸ்டரின் வருகை கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்வதியின் ரெட் கார்டு போன்ற அதிரடிகளுக்கு பிறகு, இறுதி வெற்றியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
07:36 AM (IST) Jan 17
Anbumani: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிக்கு துரோகம் செய்வதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது, வன்னியர்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கான உள் இட ஒதுக்கீட்டை வழங்காதது என விமர்சித்துள்ளார்.