MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை..! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை..! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கக் கூடிய சிறந்த வீரர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Jan 17 2026, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மதுரை வீரம் விளைந்த மண்
Image Credit : X/@arivalayam

மதுரை வீரம் விளைந்த மண்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதியாக வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள் போன்றவை பரிசாக வழங்கப்பட உள்ளன.

இதனிடையே வீரர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். அதே நேரத்தில், உங்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த மதுரை மண் என்பது, வீரம் விளைந்த மண்ணாகும். அப்படிப்பட்ட இந்த மண்ணின் வீரவிளையாட்டான உலகப் புகழ் பெற்றிருக்கக்கூடிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்கும்போது நமக்கெல்லாம் வீரம் வருகிறது. அதனை அடக்குகின்ற காளையர்களை பார்க்கின்றபோது நம்முடைய தமிழ் மண்ணுக்கு பெருமையாக இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்
Image Credit : Google

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், இந்த வீரம் விளைந்த மதுரை மண்ணில், சங்கம் வளர்த்த இந்த மாமதுரையில், அறிவு வளர்ச்சிக்காக “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும்.

அதேபோல, தமிழர்களின் அடையாளமான இந்த வீர விளையாட்டுக்கு “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்” அரங்கமும் கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்பதும் ஒரு மிகப் பெரிய சாதனையாகும்.

34
அரசு வேலை
Image Credit : Gemini

அரசு வேலை

இதனை சொல்லுகின்ற நேரத்தில், இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஜல்லிக்கட்டைப் பார்க்க முதலமைச்சராக வந்திருக்கக்கூடிய நான் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டுச் சென்றால்தான் உங்களுக்கும் திருப்தி, எனக்கும் திருப்தியாக இருக்கும்.

அதனால், இரண்டு அறிவிப்புகளை நான் மகிழ்ச்சியோடு உங்களிடத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.

முதல் அறிவிப்பு -

பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்குபெற்று, அதிக காளைகளை அடக்கி, சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், கால்நடை பராமரிப்பு துறையில், உரிய அரசு பணி இடங்களுக்கு, பணி அமர்த்திட வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

44
உயர்தர சிகிச்சை மையம்
Image Credit : Gemini

உயர்தர சிகிச்சை மையம்

இரண்டாவது அறிவிப்பு -

உலகப் புகழ் பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அலங்காநல்லூர் பகுதியில், சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இரண்டு அறிவிப்பும் உங்களுக்கு மகிழ்ச்சி தானே! அந்த மகிழ்ச்சியோடு தமிழர்கள் எல்லோரும் வெல்வோம் ஒன்றாக என்று கூறி விடைபெறுகிறேன்” என்றார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
திமுக
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னை: சர்வதேச தங்க நகை கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன்!
Recommended image2
Now Playing
அரசு நிர்வாக ரீதியாக சரியான நடவடிக்கை எடுக்கிறது" - வீரமணி வழக்கு குறித்து கார்த்தி சிதம்பரம்!
Recommended image3
Now Playing
திருச்சி: இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரமேஷ் பேட்டி!
Related Stories
Recommended image1
அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. குலுக்கல் முறையில் காரைத் தூக்கிய அஜித்! டிராக்டர் வென்ற குலமங்கலம் காளை!
Recommended image2
அந்த வார்த்தையை சொல்ல உங்களுக்கு தகுதியே இல்லை ஸ்டாலின்.. திமுகவை விடாமல் இறங்கி அடிக்கும் அன்புமணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved