Ashta Bhairavar in Sirkali Sattainathar Temple Significance Remedies Tamil : சீர்காழி சட்டைநாதசுவாமி திருக்கோயிலில் வீற்றிருக்கும் அஷ்ட பைரவர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீற்றிருக்கும் சட்டைநாத சுவாமி கோயிலில் அருள் பாலிக்கும் அஷ்ட பைரவர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதற்கு முன்னதாக கோயில் வரலாறு, கோயிலில் வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். சிவபெருமான் மூன்று வடிவங்களில் அருள் பாலிக்கிறார். அவர் மேல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். நடுத்தளத்தில் தோணியப்பர் அருள் பாலிக்கிறார். அடித்தளத்தில் சட்டை நாத சுவாமி அருள் பாலிக்கின்றார்.
ஞானப்பால் பெற்ற சம்பந்தர் வரலாறு:
சீர்காழியில் வசித்து வந்த சிவபாத இருதயர் புனிதவதி தம்பதியரின் பிள்ளை சம்பந்தன். சம்பந்தருக்கு மூன்று வயதாக இருக்கும்போது, தன் தந்தையுடன் தோணியப்பர் கோவிலுக்குப் போனார். சம்பந்தரை பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் உட்கார வைத்துவிட்டு, சிவபாத இருதயர் குளத்தில் குளிக்கச் சென்றார். சிறிது நேரம் கழிந்தது. குழந்தைக்குப் பசியெடுத்தது. குளிக்கப் போன தந்தையையும் காணவில்லை. குழந்தை சம்பந்தன் அழவே, இதைக் கண்ட தோணியப்பர், அன்னையுடன் ரிஷப வாகனத்தில் குழந்தை அருகே வந்தார். அன்னை பொற்கிண்ணத்தில் பாலை எடுத்து குழந்தைக்கு ஞானப்பால் ஊட்டினார். குழந்தை அழுகையை நிறுத்தவே, இருவரும் மறைந்தனர். நீராடி வந்த சிவபாதஇருதயர், குழந்தை சம்பந்தன் கையில் பொற்கிண்ணம் இருப்பதையும், குழந்தையின் கடைவாயில் பால் ஒழுகுவதையும் கண்டு துணுக்குற்றார்.
யாரிடம் பாலை வாங்கிக் குடித்தாய்?” என்று கோபத்துடன் கிண்ணத்தைப் பிடுங்கி வீசி எறிந்தார். அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து மிரட்டினார். மூன்று வயது நிரம்பிய குழந்தை இத்தனை இலக்கண சுத்தமாக எப்படி திடீரென்று பாட முடியும்? சிவபாத இருதயர் நடந்ததை விளங்கிக் கொண்டார். அவருக்கும் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இது சிவபெருமானின் கருணை என்பது விளங்கியது. அன்று முதல் குழந்தை சம்பந்தன் திருஞானசம்பந்தர் என்று அழைக்கப்படலானார்.
சிவபாத இருதயர் சம்பந்தன் கையில் இருந்த பொற்கிண்ணத்தை வீசியபோது, அது அங்கிருந்த சுவரில் பட்டு விழுந்தது. கிண்ணம் விழுந்த சுவடை இப்போதும்கூட பார்க்கலாம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. திருஞானசம்பந்தர் பிறந்து, பயின்ற வீடு இப்போதும் திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. தேவாரப் பாடசாலையாக இந்த இல்லம் இயங்குகிறது. இப்போதும் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று ஞானப்பால் வழங்கிய நிகழ்வு திருமுலைப்பால் விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
மூன்று வடிவத்தில் அருள்பாலிக்கும் சிவ பெருமான்:
இக்கோவில் மூன்று அடுக்குகளைக்கொண்ட குன்றுக்கோவிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. படைக்கும் தொழிலைச்செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தலத்திற்கு இறைவன் பிரம்மபுரீஸ்வரர் வடிவத்தில் அருள் பாலிக்கின்றார்.
சட்டநாதர் கோயிலின் பலன்கள்:
இந்த கோயில் தருமபுர ஆதீனத்தின் கீழ் உள்ளது இந்த கோயிலுக்கு சென்று வந்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் கூறப்படுகிறது. ஞானசம்பந்தர் குழந்தையிலேயே சிறந்த அறிவுப் பட்டவராக விளங்கினார் அதனால் நம் குழந்தைகளையும் அங்கு சென்று அங்கு உள்ள ஞானப் பால் கொடுத்து வந்தால் கல்வியில் சிறந்து விளங்குவராகவும் கூறப்படுகிறது. சட்டைநாதரைத் தரிசிக்கச் செல்லும் ஆண்கள் மேல் சட்டை அணியாமலும், பெண்கள் கூந்தலில் மலர் சூடாமலும் செல்லும் பழக்கம் இப்போதும் பின்பற்றப்படுகிறது.
எட்டு பைரவர் இருக்கும் இடம்:
சட்டநாத திருக்கோயிலில் பைரவர்கள் 8 அவதாரங்களில் இங்கு உள்ளதாக கூறப்படுகிறது எங்கும் காணாத எங்கும் காணாத எட்டு பைரவர்கள் இந்த கோயிலில் அருள் பாலிப்பதாக அறியப்படுகிறது. அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபாலி பைரவர், பீஷண பைரவர், சம்கார பைரவர் என எட்டு பைரவர்கள் இங்கு அருள் பாலிக்கின்றனர்.
