- Home
- Tamil Nadu News
- ஆண்களுக்கு இலவச பேருந்து.. மகளிருக்கு ரூ.2000.. திமுக போட்டியாக இபிஎஸ் தேர்தல் வாக்குறுதிகள்
ஆண்களுக்கு இலவச பேருந்து.. மகளிருக்கு ரூ.2000.. திமுக போட்டியாக இபிஎஸ் தேர்தல் வாக்குறுதிகள்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். இதில், ஆண்களுக்கு இலவச பேருந்து, குல விளக்குத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறை எப்போதும் இல்லாத வகையில் நான்கு முனை போட்டி நிலுவுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் சில கட்சிகள் இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அதில், ஆண்களுக்கும் இலவச பேருந்து, மகளிருக்கு ரூ.2000 உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
வேலைவாய்ப்புத் திட்டம்
* குல விளக்குத் திட்டம்
சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000 வழங்கப்படும். இத்தொகை குடும்ப தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
* 100 நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும்
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.
* ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து
நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இருசக்கர வாகனம்
* அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்
மகளிருக்கு ரூ.25,000 மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
* அனைவருக்கும் வீடு
அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகர பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.

