இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், வானிலை நிலவரம், தங்கம் விலை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:05 PM (IST) Nov 15
தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு சென்ற ரூ.1720 கோடி முதலீடு. தினம் தினம் அம்பலமாகும் பொய் முதலீடுகள் -இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றும் திமுக அரசு என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
09:58 PM (IST) Nov 15
பல மாதங்களாக நீடித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரம்மாண்டமான குளோப்ட்ராட்டர் நிகழ்வில் SSMB29 படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை 'வாரணாசி' என எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவித்துள்ளார்.
09:39 PM (IST) Nov 15
Noon Meal Scheme தேர்வு இல்லை! திருப்பத்தூர் சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலை. 10வது படித்திருந்தாலே போதும். சம்பளம் ரூ.3,000-9,000. விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2025.
09:35 PM (IST) Nov 15
KVS Mega Recruitment 2025 கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) மூலம் இந்தியா முழுவதும் 14,967 உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு. சம்பளம் ரூ.18,000 முதல். கடைசி தேதி: 04.12.2025.
09:28 PM (IST) Nov 15
SAIL Recruitment 2025 இந்திய ஸ்டீல் ஆணையத்தில் (SAIL) 124 மேலாண்மைப் பயிற்சியாளர் (MT) பணியிடங்கள். B.E/B.Tech முடித்தோர் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.50,000 முதல். கடைசி தேதி 05.12.2025.
09:24 PM (IST) Nov 15
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்டில், சுப்மன் கில்லுக்கு ஏற்பட்ட கடுமையான கழுத்து காயம் காரணமாக, அவர் ஸ்ட்ரெச்சரில் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். காயம் காரணமாக அவர் தொடர்ந்து விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது.
09:23 PM (IST) Nov 15
AIIMS Mega Recruitment 2025 எய்ம்ஸ் (AIIMS) நிறுவனத்தில் 1383 உதவியாளர், எழுத்தர், செவிலியர் பணியிடங்கள் அறிவிப்பு. 10வது முதல் டிகிரி வரை தகுதி. விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2025.
09:16 PM (IST) Nov 15
OpenAI வெளியிட்ட GPT-5.1 Instant, Thinking மாடல்கள் மேம்பட்ட புத்திசாலித்தனம், தகவமைக்கும் பகுத்தறிவு மற்றும் புதிய தொனிக் கட்டுப்பாடு அம்சங்களுடன் (Professional, Candid, Quirky) உரையாடல் AI-இல் ஒரு திருப்புமுனை.
09:07 PM (IST) Nov 15
Google Pixel 8 விலை ஃபிளிப்கார்ட்டில் ₹40,000 வரை குறைப்பு. Tensor G3 சிப் கொண்ட இந்த ஃபிளாக்ஷிப் போனை ₹35,499-க்கு வாங்கலாம். Google Pixel 8 price slashed by up to Rs 40,000 on Flipkart.
09:02 PM (IST) Nov 15
AI Window ஃபயர்பாக்ஸ்-ல் புதிய 'AI Window' வருகிறது. பயனர்கள் தங்களுக்குப் பிடித்த AI மாடலைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். தனியுரிமையுடன் கூடிய ஸ்மார்ட் பிரவுசிங்.
08:59 PM (IST) Nov 15
டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணியை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வாங்கிய நிலையில் CSKவின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் என்பதை சென்னை அணி உறுதி படுத்தி உள்ளது.
08:57 PM (IST) Nov 15
iPhone 15 விலை Amazon-ல் ₹50,990 ஆகக் குறைந்தது. A16 சிப், 48MP கேமரா, USB-C போன்ற 6 நன்மைகள் மற்றும் 60Hz திரை போன்ற 4 குறைபாடுகள்.
08:37 PM (IST) Nov 15
IPL 2026ஐ முன்னிட்டு அணி நிர்வாகம் தரப்பில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியல் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதில் பல முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
07:10 PM (IST) Nov 15
IPL டிரேடில், ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் CSK அணிக்கு மாறியுள்ளார். ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ராஜஸ்தான் அணிக்கு செல்கின்றனர். 11 சீசன்களுக்குப் பிறகு தனது விலகல் குறித்து சாம்சன் சமூக ஊடகங்களில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
06:45 PM (IST) Nov 15
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய சுழலில் சிக்கிய தென்னாப்பிரிகா வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 93 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.
06:27 PM (IST) Nov 15
இப்போது ஆரம்பிக்கப்பட்ட கட்சி தவெகவை நம்பி சென்றால் என்னவாகும்? என்கிற சந்தேகம் காங்கிரஸ்க்கும் எழும். ஆகையால் காங்கிரஸ் கட்சி இப்போது திமுகவிடம் அனுசரணையாக செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளிவிடப்பட்டுள்ளது.
06:12 PM (IST) Nov 15
நீங்கள் குறட்டை பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் குறட்டை விடுவதை நிரந்தரமாக நிறுத்தி விடலாம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.
05:47 PM (IST) Nov 15
உடல் எடையை குறைக்க சீரகத் தண்ணீர் எவ்வாறு உதவுகிறது? அதை எப்படி குடிக்க வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
05:43 PM (IST) Nov 15
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மோசமான செயல்திறனால் அதிர்ச்சியடைந்த லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
05:18 PM (IST) Nov 15
தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணியால் தமிழகத்தில் உள்ள அனைவரும் வாக்களிக்கும் உரிமையை இழக்கலாம் என்ற தவெக தலைவர் விஜய் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
05:04 PM (IST) Nov 15
கர்ப்பிணிகள் மட்சா டீ குடிக்கலாமா? கூடாதா? அப்படி குடித்தால் அதனால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
04:21 PM (IST) Nov 15
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட கனி இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ள நிலையில், அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி பார்க்கலாம்.
03:57 PM (IST) Nov 15
பிகாரில் பிரசாந்த் கிஷோர் மூன்றாவது விருப்பமாக மாறலாம். ஆனால் அதற்கு நேரம் எடுக்கும். ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் காரணமாக பிகேவுக்கு இருந்த ஆதரவுத் தளம் இல்லை. பிகே தொடர்ந்து பணியாற்றினால், அவர் இடத்தைக் கண்டுபிடிக்க முடியும்
03:44 PM (IST) Nov 15
தயாரிப்பாளரும், குடும்ப திரைப்படங்களின் இயக்குநருமான வி சேகர் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் இயக்கிய காலத்தால் அழியாத படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
03:39 PM (IST) Nov 15
03:30 PM (IST) Nov 15
வேலை பார்க்கும் மும்முரத்தில் மதிய உணவை தவிர்க்கும் நபர்கள் எவ்வளவு பெரிய தவறை செய்கிறார்கள் என நிபுணர்கள் விளக்குவதை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
03:17 PM (IST) Nov 15
தமிழகத்தில் தொழில் தொடங்குவதாக தெரிவித்திருந்த கொரிய நிறுவனம் ஆந்திராவுக்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
03:07 PM (IST) Nov 15
நடிகர் விஜய் தேவரகொண்டாவை அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள உள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, அவருடனான முத்தக்காட்சி பற்றி பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசி இருக்கிறார்.
03:07 PM (IST) Nov 15
கோவையில் சட்டவிரோதமாக வங்கதேச இளம் பெண்ணை அழைத்து வந்து வீட்டு வேலை செய்ய வைத்து கொடுமைப்படுத்திய பீகாரைச் சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
03:04 PM (IST) Nov 15
சாட்டை துரைமுருகனின் அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள வக்கற்ற டி.டி.வி. தினகரன் குண்டர்களை அவரது வீட்டுக்கு அனுப்பி பொறுக்கித்தனம் செய்ய முற்படுவது கோழைத்தனமானது’
02:45 PM (IST) Nov 15
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்காவின் 159 ரன்களுக்கு எதிராக இந்தியா 30 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
02:40 PM (IST) Nov 15
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருந்த தலைவர் 173 திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில், அப்படத்தில் இருந்து அவர் விலகியது பற்றி கமல்ஹாசன் பேசி இருக்கிறார்.
02:30 PM (IST) Nov 15
சூயிங்கம் தெரியாமல் விழுங்கிவிட்டால் உடலுக்குள் என்ன ஆகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
02:17 PM (IST) Nov 15
மயிலாடுதுறை திருமணஞ்சேரி உத்வகநாதர் கோவில், திருமணத் தடைகளை நீக்கும் ஒரு முக்கிய பரிகார ஸ்தலமாகும். இங்கு வந்து மாலை சூட்டி வழிபடுவதால் திருமணம் கைகூடும் என்பதும், தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனப்தும் ஐதீகம்.
01:55 PM (IST) Nov 15
பாலக்கோட்டில் கஞ்சா போதையில் இருந்த நான்கு இளைஞர்கள், லாரி டிரைவரை தாக்கி, பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
01:43 PM (IST) Nov 15
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷனில் திவாகர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்டால் வேறு ஒருவர் எலிமினேட் ஆகி உள்ளார்.
01:33 PM (IST) Nov 15
ஆர்.ஜே.டி வேட்பாளர்களைக் குறிவைத்து, வாக்காளர்களை ஆதரிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். அந்த வாக்குகளை ஒரு கைப்பிடி தண்ணீரில் மூழ்குவதற்கு சமம் என ஒப்பிட்டார்.
01:08 PM (IST) Nov 15
2024-ல் தொடங்கிய தவெக, 2026 தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது திமுக, அதிமுக, பாஜக போன்ற பாரம்பரிய கட்சிகளிடமிருந்து பல முன்னாள் தலைவர்களை ஈர்த்து வருகிறது.
01:02 PM (IST) Nov 15
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது காதல் மனைவியை கணவரே பொதுமக்கள் மத்தியில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிய செவிலியரான சரஸ்வதியை, அவரது கணவர் விஜய் வழிமறித்து தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
12:58 PM (IST) Nov 15
ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை கொட்டிக் கொடுக்கும் பூண்டை குளிர்காலத்தில் எப்படி சாப்பிட வேண்டுமென்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.