- Home
- Sports
- Sports Cricket
- சூடுபிடிக்கும் IPL 2026: பத்திரனா முதல் வெங்கடேஷ் ஐயர் வரை.. முக்கிய வீரர்களை தூக்கி எறிந்த அணிகள்
சூடுபிடிக்கும் IPL 2026: பத்திரனா முதல் வெங்கடேஷ் ஐயர் வரை.. முக்கிய வீரர்களை தூக்கி எறிந்த அணிகள்
IPL 2026ஐ முன்னிட்டு அணி நிர்வாகம் தரப்பில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியல் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதில் பல முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

KKR அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்
லெக் ஸ்பின்னர் மயங்க் மார்கண்டேவை மும்பைக்கு டிரேட் செய்துள்ளது. ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி காக், மொயின் அலி, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
ரஹானே, ரிங்கு சிங், சுனில் நரைன், உம்ரான் மாலிக், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட முக்கிய வீரர்களை KKR தக்கவைத்துள்ளது. அணியிடம் தற்போது ₹64.3 கோடி கையிருப்பு உள்ளது.
IPL 2026ல் ஹாட் டாபிக்காக மாறிய CSK
சென்னை அணி டிரேடிங் முறையில் அதிரடி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை விட்டுக் கொடுத்து, ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை பெற்றதன் மூலம் இந்த தொடரில் தனி கவனம் பெற்றுள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ரச்சின் ரவீந்திரா, கான்வே, பதிரனா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், மகேந்திர சிங் தோனி, உர்வில் படேல், ஷிவம் துபே, கலீல் அகமது, ஷ்ரேயாஸ் கோபால் உள்ளிட்ட வீரர்களை தக்கவைத்துக் கொண்டது.
17 வீரர்களை கழட்டிவிட்ட Delhi Capitals
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: மோஹித் சர்மா, ஃபாஃப் டு பிளெசிஸ், செடிக்குல்லா அடல், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், மன்வந்த் குமார், தர்ஷன் நல்கண்டே, டோноваன் ஃபெரேரா (டிரேட் மூலம் வெளியேறினார்).
தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்
அக்சர் படேல், கே.எல். ராகுல், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், திரிபுராணா விஜய், மாதவ் திவாரி, மிட்செல் ஸ்டார்க், டி. நடராஜன், முகேஷ் குமார், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், நிதிஷ் ராணா (டிரேட் மூலம்).
முக்கிய வீரர்களை தக்கவைத்துக்கொண்ட GT
தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்
சுப்மன் கில் (கேப்டன்), ரஷித் கான், சாய் சுதர்சன், ராகுல் தெவாட்டியா, ஷாருக் கான், ககிசோ ரபாடா, ஜோஸ் பட்லர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிஷாந்த் சிந்து, குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், மானவ் சுதர், வாஷிங்டன் சுந்தர், அர்ஷத் கான், குர்னூர் பிரார், சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், கிளென் பிலிப்ஸ்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்
கரீம் ஜனத், குல்வந்த் கெஜ்ரோலியா, ஜெரால்ட் கோட்ஸி, தசுன் ஷனகா மற்றும் மஹிபால் லோம்ரோர்.
IPL நடப்பு சாம்பியன்..
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
ரஜத் பாடிதார், விராட் கோலி, பில் சால்ட், க்ருனால் பாண்ட்யா, ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், நுவான் துஷாரா, புவனேஷ்வர் குமார், ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட், சுயாஷ் சர்மா, ஸ்வப்னில் சிங், யாஷ் தயாள், அபிநந்தன் சிங், ரசிக் தார்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
ஸ்வஸ்திக் சிகாரா, மயங்க் அகர்வால், டிம் செய்ஃபர்ட், லியாம் லிவிங்ஸ்டன், மனோஜ் பண்டகே, லுங்கி இங்கிடி, பிளெஸ்ஸிங் முசரபானி, மோஹித் ரதீ.