- Home
- Sports
- Sports Cricket
- CSKவின் கேப்டன் ருதுராஜ் தான்..! குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை அணி
CSKவின் கேப்டன் ருதுராஜ் தான்..! குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை அணி
டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணியை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வாங்கிய நிலையில் CSKவின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் என்பதை சென்னை அணி உறுதி படுத்தி உள்ளது.

சூடுபிடிக்கும் ஐபிஎல் தொடர்
2026 ஐபிஎல் தொடரை முன்னிட்டு சிஎஸ்கே உட்பட அனைத்து அணிகளும் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள், அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்களை இன்று அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக தெரிவித்துள்ளன. மேலும் ஒருசில வீரர்கள் டிரேடிங் மூலமாகவும் அணிகளுக்கு இடையே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டிரேடிங் செய்யப்பட்ட ஜடேஜா
டிரேடிங் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி பெற்றுக் கொண்டது. அவருக்கு பதிலாக நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சாம் கரண் ராஜஸ்தான் அணிக்கு வழங்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு வந்த சஞ்சு..
2026 தொடருடன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால் அணிக்கு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் தேவை என்ற தொலைநோக்கு பார்வையோடு சென்னை அணி சஞ்சு சாம்சனை வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்ததால் சென்னை அணியிலும் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது.
சென்னை அணியின் கேப்டன்
இந்நிலையில் சென்னை அணி வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் 2026 சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தான் அணியை வழிநடத்துவார் என்று உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த சீசனின் தொடக்கத்தில் ருதுராஜ் CSK அணியை வழிநடத்திய நிலையில் காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து தோனி மீண்டும் கேப்டனாக செயல்பட்டார். இதனிடையே தற்போது ருதுராஜ் முழு உடல் தகுதியுடன் இருக்கும் நிலையில் அவரே அணியை வழிநடத்த உள்ளார்.