KVS Mega Recruitment 2025 கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) மூலம் இந்தியா முழுவதும் 14,967 உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு. சம்பளம் ரூ.18,000 முதல். கடைசி தேதி: 04.12.2025.

மத்திய அரசின் கீழ் செயல்படும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா சங்கதன் (Kendriya Vidyalaya Sangathan - KVS), இந்தியா முழுவதும் உள்ள தங்கள் பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப பிரம்மாண்டமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மத்திய அரசு வேலை தேடும் அனைத்து தகுதி உள்ளவர்களுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

கல்வித் தகுதி மற்றும் பதவிகளின் பட்டியல்

இந்த அறிவிப்பில் Assistant Commissioner, Principal, PGTs (Post Graduate Teachers), TGTs (Trained Graduate Teachers), Primary Teachers போன்ற ஆசிரியர் பதவிகள் மட்டுமின்றி, Lab Attendant, Multi Tasking Staff (MTS), Junior Secretariat Assistant (JSA), Senior Secretariat Assistant, Stenographer போன்ற நிர்வாக மற்றும் அலுவலகப் பணிகளும் அடங்கும்.

• கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் முதுகலை (Master’s Degree) மற்றும் B.Ed. வரை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது.

• சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் பதவிக்கேற்ப மாதச் சம்பளம் ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.2,09,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 வயது வரம்பு மற்றும் கட்டண விவரங்கள்

விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி, தாழ்த்தப்பட்டோர் (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகள், பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

• விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பிக்கும் பதவிக்கேற்ப கட்டணம் மாறுபடுகிறது.

o உயர்மட்ட பதவிகளுக்கு (Principal, Commissioner) ரூ.2800/-.

o ஆசிரியர் மற்றும் இடைநிலை நிர்வாகப் பதவிகளுக்கு ரூ.2000/-.

o துணைநிலை நிர்வாகப் பதவிகளுக்கு (JSA, MTS) ரூ.1700/-.

o SC/ST/PH பிரிவினருக்கு அனைத்துப் பதவிகளுக்கும் ரூ.500/- மட்டுமே.

தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை

கேந்திரிய வித்யாலயா பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Tier I & II தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், பதவிக்கேற்ப தட்டச்சுத் தேர்வு (Typing Test), கணினித் திறன் தேர்வு (Computer Proficiency Test), சுருக்கெழுத்துத் தேர்வு (Shorthand Test) போன்ற திறன் தேர்வுகளும் நடத்தப்படும்.

• விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.11.2025

• விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.12.2025

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் KVS-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kvsangathan.nic.in/ மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தகுதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.