- Home
- Career
- Job Alert: டிகிரி கையில இருக்கா?! மத்திய அரசு வேலை காத்திருக்கு.! சம்பளத்தை கேட்டா சந்தோஷத்துல மயக்கமே வந்துடும்.!
Job Alert: டிகிரி கையில இருக்கா?! மத்திய அரசு வேலை காத்திருக்கு.! சம்பளத்தை கேட்டா சந்தோஷத்துல மயக்கமே வந்துடும்.!
மத்திய அரசின் ஸ்டீல் துறையின் கீழ் இயங்கும் MSTC நிறுவனம், மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவிக்கு 37 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. பொறியியல், நிதி உள்ளிட்ட துறைகளில் தகுதியுடைய 28 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் நவம்பர் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரி இளைஞர்களுக்கு ஜாக்பாட்!
மத்திய அரசின் ஸ்டீல் துறையின் கீழ் செயல்படும் மெட்டல் ஸ்க்ராப் ட்ரேட் கார்ப்பரேஷன் (MSTC) நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவியல், பொறியியல், சட்டம், வணிகம், நிதி போன்ற பல துறைகளில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சிஸ்டம் பிரிவில் 7, ஆபரேஷன் பிரிவில் 4, நிர்வாகப் பிரிவில் 2, சட்டப் பிரிவில் 1 மற்றும் நிதி & கணக்கு பிரிவில் 23 பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்கும் நபர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என விதிமுறை கூறுகிறது
ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி கல்வித்தகுதி.!
ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிஸ்டம் பிரிவிற்கான தகுதியாக எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் BE/B.Tech அல்லது MCA முடித்திருக்க வேண்டும். ஆபரேஷன் மற்றும் நிர்வாகப் பிரிவுகளுக்காக அறிவியல், வணிகம், பொறியியல், சட்டம், தகவல் தொழில்நுட்பம் அல்லது வணிக நிர்வாகத்தில் பட்டம் அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சட்டப் பிரிவிற்கான விண்ணப்பதாரர்கள் சட்டத்தில் டிகிரி அல்லது முதுநிலை தகுதி பெற்றிருக்க வேண்டும். நிதி & கணக்கு பிரிவில் CA, CMA அல்லது MBA முடிப்பதே தகுதியாகும். சட்டம் மற்றும் நிதி பிரிவுகளுக்கு கணினி அறிவு கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதான் சம்பளம் மக்களே.!
இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆண்டு ஊதியம் ரூ.14.50 லட்சம் வரை இருக்கும். தேர்வு மூன்று கட்டங்களில் நடைபெறும்: கணினி வழி எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு. CBT தேர்வில் பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 40% மதிப்பெண்களையும், SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35% மதிப்பெண்களையும் பெற வேண்டும்.
கணினி வழி தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் தகுதி அடிப்படையில் குழு கலந்துரையாடலுக்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு காலிப்பணியிடத்திற்கும் 10 பேர் GD-க்கு, பின்னர் GD-யில் தேர்வு பெறுவோரில் 5 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த மூன்று கட்டங்களில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கும் முறை முழுவதும் ஆன்லைன் வழியாக மட்டுமே. விண்ணப்பதாரர்கள் MSTC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mstcindia.co.in/MSTC_Careers/ என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.
சென்னையில் தேர்வு மையம்
தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதால் தமிழக விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். விண்ணப்பிக்க ரூ.500 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அரசு துறையில் உயர்ந்த சம்பளத்துடன் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வேலை வாய்ப்பாக கருதப்படுகிறது.