MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Job Alert: இளைஞர்களை அழைக்கிறது இந்திய ரயில்வே.! 6 ஆயிரம் பேருக்கு அடிக்க போகுது அதிர்ஷ்டம்.! விண்ணப்பிக்க மறக்காதீங்க.!

Job Alert: இளைஞர்களை அழைக்கிறது இந்திய ரயில்வே.! 6 ஆயிரம் பேருக்கு அடிக்க போகுது அதிர்ஷ்டம்.! விண்ணப்பிக்க மறக்காதீங்க.!

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) NTPC 2025 அறிவிப்பின் மூலம் ஸ்டேஷன் மாஸ்டர், கிளர்க் உள்ளிட்ட 5810 காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த தகுதியானவர்கள் 20.11.2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 14 2025, 07:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்கா.!
Image Credit : stockPhoto

வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்கா.!

இந்திய ரயில்வேயில் நிரந்தர பணியில் சேர விரும்பும் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பு வெளியாகியுள்ளது. RRB NTPC (Non Technical Popular Categories) 2025 அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 5810 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஸ்டேஷன் மாஸ்டர் முதல் கிளர்க் வரை பல்வேறு நிர்வாகப் பணியிடங்கள் இதில் அடங்கும். தகுதியானவர்கள் 20.11.2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

24
காலியிடங்கள் – பதவி வாரியாக
Image Credit : Google

காலியிடங்கள் – பதவி வாரியாக

Chief Commercial cum Ticket Supervisor – 161

Station Master – 615

Goods Train Manager – 3416

Junior Accounts Assistant cum Typist – 921

Senior Clerk cum Typist – 638

Traffic Assistant – 59

இந்த அறிவிப்பு இளைஞர்களை சந்தோஷப்படுத்தியுள்ள நிலையில், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கியுள்ளது. மத்திய அரசின் நலன்களுடன் கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்பதால் இளைஞர்கள் இதனை முழுமையாக பயன்படுத்திகொண்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்கம்.

Related Articles

Related image1
Job Alert: வேறெதுவும் தேவையில்லை டிகிரி மட்டும் போதும்.! Exam, Interview கிடையாது.! தபால்துறையில் பணியாற்ற அட்டகாச வாய்ப்பு.!
Related image2
Govt Training: தமிழக இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 50 ஆயிரம் பேருக்கு தொழில் பயிற்சி.! கல்வி தகுதி, வயது வரம்பு இதுதான்.!
34
கல்வி தகுதி இதுதான் தெரியுமா?
Image Credit : Google

கல்வி தகுதி இதுதான் தெரியுமா?

அனைத்து பதவிகளுக்கும் பட்டப்படிப்பு (Degree) கட்டாயம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருந்தாலே போதும் என்பதால் வேலை தேடிக்கொண்டு இருப்போர் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்திய ரயல்வேயில் பணியில் இருப்போர் இந்தியா முழுவதும் இலவசமாக ரயிலில் பயணிக்கலாம் என்பது சந்தோஷ செய்திதானே.

44
வயது வரம்பு மற்றும் சம்பள விவரம் இதுதான்.!
Image Credit : Google

வயது வரம்பு மற்றும் சம்பள விவரம் இதுதான்.!

01.01.2026 நிலவரப்படி 18 முதல் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

  1. OBC பிரிவு – 3 ஆண்டு தளர்வு
  2. SC/ST பிரிவு – 5 ஆண்டு தளர்வு

சம்பள விவரம்

  • Chief Commercial cum Ticket Supervisor – ₹35,400
  • Station Master – ₹35,400
  • Goods Train Manager – ₹29,200
  • Junior Accounts Assistant cum Typist – ₹29,200
  • Senior Clerk cum Typist – ₹29,200
  • Traffic Assistant – ₹25,500

தேர்வு முறை

இந்த அறிவிப்பின் தேர்வு செயல்முறை இரண்டு தனிப்பட்ட CBT நிலைகளில் நடைபெறும்:

CBT – 1 (முதல் நிலை கணினி தேர்வு)

CBT – 2 (இரண்டாம் நிலை கணினி தேர்வு) இரண்டாம் நிலைத் தேர்வில் தகுதி பெறுவோரின் அடிப்படையில் பதவிகள் ஒதுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ளவர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் rrbchennai.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

பொது பிரிவு – ₹500

SC/ST மற்றும் பெண்கள் – ₹250

கடைசி தேதி

20.11.2025 – விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள்.

இந்திய ரயில்வே போன்ற மிகப்பெரிய அரசு துறையில் பணிபுரிய விரும்பும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தயங்காமல் உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved