- Home
- Career
- Govt Training: தமிழக இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 50 ஆயிரம் பேருக்கு தொழில் பயிற்சி.! கல்வி தகுதி, வயது வரம்பு இதுதான்.!
Govt Training: தமிழக இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 50 ஆயிரம் பேருக்கு தொழில் பயிற்சி.! கல்வி தகுதி, வயது வரம்பு இதுதான்.!
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 50,000 கிராமப்புற இளைஞர்களுக்கு அரசு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறது. எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட துறைகளில் வழங்கப்படும் இந்த பயிற்சி் வேலைவாய்ப்பை பெருக்கும்.

இளைஞர்களுக்கு அட்டகாசமான வாய்ப்புகள்
தமிழக அரசு வழங்கி வரும் தொழிற் பயிற்சிகள் குறித்த செய்திகள் இணையதளம் மற்றும் சமூக வலதளங்கள் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று இருக்கும் தற்போதைய நிலையில் கூட யாருக்கும் தெரியாமலேயே உள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தமிழக அரசு பயிற்சி அளிக்க காத்தருக்கம் நிலையில் அதனை இளைஞர்கள் யாரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேலைவாய்ப்பு, பொருளாதாரம், கல்வி, மற்றும் தன்னம்பிக்கை பயிற்சிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்தை நோக்கி பல திறன் மேம்பாட்டு திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.
தமிழகம் முன்னேற இதுதான் காரணம்
பெண்களுக்கு மட்டுமல்லாமல் 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்கும் வகையில் தமிழக அரசு மாவட்ட ரீதியாக பல்வேறு தொழில் பயிற்சிகளை நடத்தி வருகிறது. அதேபோல் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கத்தில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இதுவரை 4.76 லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக்குழுக்களில் 54 லட்சம் பெண்கள் இணைந்துள்ளனர். மேலும், இந்தக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது தமிழக அரசே. அட்டை வைத்திருப்போருக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
அதேபோல், சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த பல விற்பனை வாயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நிர்வாகம், நிதி மேலாண்மை மற்றும் தலைமைத்துவம் குறித்த ஒருநாள் புதுமை பயிற்சியும் வழங்கப்பட்டது.
வயது வரம்பு இதுதான்
இந்நிலையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் Community Skill Schools வாயிலாக, 50,000 கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க அரசு முக்கிய முடிவெடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 2,500 திறன் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்களை அதனை பயன்படுத்திகொண்டால் தமிழகம் தொழல் வளர்ச்சிதுறையில் புதுமை படைக்கும் என்றால் அது மிகையல்ல.
இந்தப் பள்ளிகள் மூலம் எலக்ட்ரீஷியன், இருசக்கர வாகன சரி செய்யுதல், AC மெக்கானிக் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட துறைகளில் நேரடி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் கிராமப்புற இளைஞர்கள், சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்று பயிற்சியை பெறலாம். 18 முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு தங்களது எதிர்காலத்தை மகிழ்ச்சியாக மாற்றிகொள்ளலாம். இதற்கு கல்வி தகுதி தேவையில்லை. ஆர்வமும் ஊக்கமும் இருந்தாலே போதும் என தெரவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிக்காக யாரை தொடர்புகொள்ள வேண்டும்?
வேலை தேடும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பயிற்சி விவரங்கள் மற்றும் சேர்க்கை தொடர்பாக மாவட்ட ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் அல்லது வட்டார மேலாளரை நேரடியாக தொடர்புகொள்ளலாம். இந்த முடிவின் மூலம் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டும் வேலை வாய்ப்பும் கிடைக்கும் என அரசு நம்புகிறது.