- Home
- Career
- Job Alert: வேறெதுவும் தேவையில்லை டிகிரி மட்டும் போதும்.! Exam, Interview கிடையாது.! தபால்துறையில் பணியாற்ற அட்டகாச வாய்ப்பு.!
Job Alert: வேறெதுவும் தேவையில்லை டிகிரி மட்டும் போதும்.! Exam, Interview கிடையாது.! தபால்துறையில் பணியாற்ற அட்டகாச வாய்ப்பு.!
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி (IPPB) அசிஸ்டண்ட் மேனேஜர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பதவிகளுக்கு 309 காலியிடங்களை அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு அல்லது நேர்காணல் இன்றி நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி அழைக்கிறது
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (India Post Payments Bank - IPPB) அசிஸ்டண்ட் மேனேஜர் மற்றும் ஜூனியர் அசோசியேட் ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 309 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் அசிஸ்டண்ட் மேனேஜர் 110, ஜூனியர் அசோசியேட் 199 இடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் சென்னை, மதுரை, ஈரோடு, திருச்சி, சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட 17 இடங்களில் பணியிடங்கள் உள்ளன.
தேர்வு அல்லது நேர்காணல் எதுவும் இல்லை
இப்பணியிடங்களுக்கு தேர்வு அல்லது நேர்காணல் எதுவும் இல்லை. பட்டப்படிப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஆனால் விண்ணப்பதாரர்கள் அதிகரித்தால் வங்கி ஆன்லைன் தேர்வு அல்லது குழு கலந்துரையாடல் நடத்தும் உரிமை கொண்டுள்ளது.
தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை
தகுதி
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். ஜூனியர் அசோசியேட் பதவிக்கு அஞ்சல் துறை ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கு அஞ்சல் துறை ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியாது.
வயது வரம்பு
ஜூனியர் அசோசியேட் – அதிகபட்சம் 32 வயது; அசிஸ்டண்ட் மேனேஜர் – 35 வயது வரை. (01.11.2025 அன்றைய நிலவரப்படி).
விண்ணப்ப முறை
ஆர்வமுள்ளவர்கள் https://ippbonline.bank.in/ என்ற இணையதளத்தில் டிசம்பர் 1, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.750. தேர்வு செய்யப்பட்டவர்கள் முதற்கட்டமாக 1 வருடத்திற்கு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
இந்த வேலைகள் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் வங்கியில் என்பதால், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றும் வாய்ப்பு உள்ளது. டிகிரி பெற்றவர்களுக்கு இது ஒரு சிறந்த அரசு வேலை வாய்ப்பு!