- Home
- Career
- Job Alert: இஸ்ரோவின் ஜாக்பாட் அறிவிப்பு.! ரூ.1.77 லட்சம் வரை சம்பளம்.! 2 நாட்களுக்குள் விண்ணப்பிக்கனும் மக்களே.!
Job Alert: இஸ்ரோவின் ஜாக்பாட் அறிவிப்பு.! ரூ.1.77 லட்சம் வரை சம்பளம்.! 2 நாட்களுக்குள் விண்ணப்பிக்கனும் மக்களே.!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, டெக்னீஷியன், டிரைவர், நர்ஸ் உள்ளிட்ட 141 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இஸ்ரோ அழைக்கிறது இளைஞர்களை.!
இந்தியாவின் பெருமைமிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ (ISRO) தற்போது பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. நாட்டின் விண்வெளித் துறையில் உலக நாடுகளுடன் போட்டியிடும் இஸ்ரோவில் வேலை செய்வது பலருக்கும் ஒரு கனவு. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் மொத்தம் 141 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.
10 ஆம் வகுப்பு முடித்தால் கைநிறைய சம்பளம்.!
அதில் டெக்னீஷியன், டிரைவர், நர்ஸ், சமையலர், ஃபயர்மேன், வரைவாளர், டெக்னீஷியன் B (கணினி அறிவியல்) போன்ற பதவிகள் அடங்கும். விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது 10ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, எம்.இ போன்ற தகுதிகளில் ஏதாவது ஒன்றை முடித்திருக்க வேண்டும். டிரைவர் பணியிடத்துக்கு உரிய வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம்.
வயது வரம்பு
18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சில விஞ்ஞானி / இன்ஜினீயர் பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பள விவரம்
சயிண்டிஸ்ட் / இன்ஜினீயர் – ₹56,100 முதல் ₹1,77,500 வரை
நர்ஸ் / டெக்னிக்கல் அசிஸ்டண்ட் – ₹44,900 முதல் ₹1,42,400 வரை
ஃபயர்மேன் / டிரைவர் / சமையலர் – ₹19,900 முதல் ₹63,200 வரை
டெக்னீஷியன் – ₹21,700 முதல் ₹69,100 வரை
பணி இடங்கள், தேர்வு முறை
பணி இடங்கள்: தமிழ்நாட்டின் மகேந்திரகிரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு மையங்கள் சென்னை மற்றும் நெல்லை நகரங்களில் ஏற்பாடு செய்யப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்க கடைசி தேதி – நவம்பர் 14, 2025 (வெள்ளிக்கிழமை). இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து இந்த பொற்கால வாய்ப்பை தவறவிடாதீர்கள்!