- Home
- Lifestyle
- Chewing Gum : சூயிங்கம் தெரியாம விழுங்கிட்டால் உடம்புல என்ன ஆகும்? வயிற்றில் அப்படியே இருக்குமா?
Chewing Gum : சூயிங்கம் தெரியாம விழுங்கிட்டால் உடம்புல என்ன ஆகும்? வயிற்றில் அப்படியே இருக்குமா?
சூயிங்கம் தெரியாமல் விழுங்கிவிட்டால் உடலுக்குள் என்ன ஆகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சூயிங்கம் பலரும் தினமும் சாப்பிடுவதை பழக்கமாக வைத்துள்ளனர். இனிப்பு கலந்த சுவையில் இது இருப்பதால், சிலர் தினமும் கூட சாப்பிடுவார்கள். சூயிங்கம் வாய் துர்நாற்றத்தை போக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இத்தகைய சூழ்நிலையில், சூயிங்கத்தை சாப்பிடும் போது தவறுதலாக விழுங்கி விடுவோம். அப்படி விழுங்கி விட்டால் அது வயிற்றுக்குள் ஒட்டிக்கொள்ளும். அதுவும் வயிற்றில் 7 வருடங்கள் இருக்கும் என்று சில கட்டுக் கதைகள் சொல்லுவார்கள். இன்றும் கூட சிலர் சூயிங்கம் தெரியாமல் விழுங்கி விட்டால் கூட பயப்படுவார்கள். ஆனால், உண்மையில் சூயிங்கம் விழுங்கினால் உடலுக்குள் என்ன ஆகும் என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
உண்மையில், சூயிங்கத்தை விழுங்கினால் உடலால் அதை ஜீரணிக்க முடியாது தான். ஆனால் அது மலத்தின் வழியாக வெளியே வந்துவிடும்.
முன்பெல்லாம் சூயிங்கம் இனிப்புகள் மற்றும் பல்வேறு சுவையூட்டிகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அவை செரிமானத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் தற்போது செயற்கை பாலிமர்கள், ரப்பர் போன்ற பொருட்கள் கொண்டு சூயிங்கம் தயாரிக்கப்படுகின்றது.
இந்த செயற்கை பொருட்கள் வயிற்றில் ஒரு வாரம் வரை இருக்கும். பிறகு வெளியேறும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் அவை உடலுக்குள் சென்று செரிமான அமைப்பின் செயல்பாட்டை பாதிக்கும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, சூயிங்கத்தை அதிகமாக சாப்பிடுவதால் செரிமான அமைப்பின் செயல்பாடு பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், சுவாச பிரச்சனையும் ஏற்படும். இதனால் இதய அழுத்தம் உண்டாகும்.