- Home
- உடல்நலம்
- Stomach Ache : அடிக்கடி வயிறு வலித்தால்... அஜீரணம் இல்ல; இந்த '5' நோய்களின் வார்னிங்கா இருக்கலாம்!!
Stomach Ache : அடிக்கடி வயிறு வலித்தால்... அஜீரணம் இல்ல; இந்த '5' நோய்களின் வார்னிங்கா இருக்கலாம்!!
அடிக்கடி வயிற்றில் வலி வந்தால் அலட்சியம் காட்டக் கூடாது. அது சில நோய்களின் அறிகுறிகளாக கூட இருக்கலாம்.

Causes of Stomach Ache
எப்போதாவது ஒருமுறை வயிற்றில் அசௌகரியம் வந்தால் கவலைப்படத் தேவையில்லை. அஜீரணக் கோளாறாக இருக்கலாம். ஆனால் தாங்கமுடியாமல் மோசமான வயிற்று வலி தொடர்ந்து வந்தால் அப்படி இருக்கக் கூடாது. ஏனென்றால் சில நேரங்களில் வயிற்றுவலி அஜீரணமாக இல்லாமல் வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கும்.
பித்தப்பை கற்கள்
வயிற்று வலி பித்தப்பை கற்களின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. பித்தப்பையில் உள்ள கடினமான படிவுகள் பித்த ஓட்டத்தைத் தடுக்கும். இதனால் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டதும் கடுமையான மேல் வயிற்று வலி வருகிறது.
இரைப்பை அழற்சி
இது ஏதேனும் தொற்று, மன அழுத்தம், வலி நிவாரணிகளின் அதீத பயன்பாட்டால் வரும். வயிற்றுப் புறணியில் ஏற்படுகிற வீக்கத்தால் இந்த வலி வருகிறது. வயிற்று எரிச்சலுடன் வலி, குமட்டல், வீக்கமும் ஏற்படும். உணவு சாப்பிட்ட உடனேயே வலியை தரும்.
ரிஃப்ளக்ஸ் நோய்
இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் இருந்தால் வயிற்று அமிலம் அடிக்கடி உணவுக்குழாயில் திரும்பிச் செல்லும். இதனால் நெஞ்செரிச்சல், வயிற்று அசௌகரியம், வாயில் புளிப்புச் சுவை போன்றவை வரலாம்.
குடல் அழற்சி
உங்களுக்கு குடல்வால் அழற்சி வந்தால், கீழ் வலது அடிவயிற்றில் பயங்கரமான வலியும், காய்ச்சலும் வரும். இந்த அறிகுறிகளுடன் குமட்டலும் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது அவசியம்.
அல்சர்
வயிற்றுப் பகுதி அல்லது சிறுகுடலின் உட்புறத்தில் புண்கள் வருவதால் வயிறு வலிக்கலாம். இது ஹெச். பைலோரி தொற்று காரணமாக வரலாம். வயிற்றில் எரியும் உணர்வு, வலி வரும். சாப்பிடாமல் வயிறு காலியாக இருந்தால் மோசமான பாதிப்பை தரும்.
உங்களுக்கு வயிற்று வலியுடன் மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் இருக்கும்பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.