- Home
- Spiritual
- Spiritual: “பேச்சுலரா நீங்க…! இந்த கோவிலுக்கு போயி வந்தா, அடுத்த தடவையே ஜோடியோட தான் போவீங்க!”
Spiritual: “பேச்சுலரா நீங்க…! இந்த கோவிலுக்கு போயி வந்தா, அடுத்த தடவையே ஜோடியோட தான் போவீங்க!”
மயிலாடுதுறை திருமணஞ்சேரி உத்வகநாதர் கோவில், திருமணத் தடைகளை நீக்கும் ஒரு முக்கிய பரிகார ஸ்தலமாகும். இங்கு வந்து மாலை சூட்டி வழிபடுவதால் திருமணம் கைகூடும் என்பதும், தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனப்தும் ஐதீகம்.

திருமண வரும் தரும் ஆலயம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் அமைந்துள்ள திருமணஞ்சேரி உத்வகநாதர் கோவில், திருமணத் தடைகள் நீங்கும் பரிகார ஸ்தலமாக தமிழகத்தில் பெரும் நம்பிக்கையுடன் தரிசிக்கப்படும் தலம். பழங்காலத்தில் ‘கோவில்காடு’ என அழைக்கப்பட்ட இந்த ஊர், காலப்போக்கில் ‘திருமணஞ்சேரி’ என்று பெயர் பெற்றது. இங்கு சிவபெருமான் கந்தபரிமலேஸ்வரராகவும், அம்பாள் பெரியநாயகியாகவும் அருள்பாலிக்கின்றனர்.
இந்தத் தலத்தில் சிவனுக்கும் அம்பாளுக்கும் அடுத்து நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, சுயம்பு விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி–தேவசேனா சமேத சுப்பிரமணியர், துர்கை, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, சூரியன் உள்ளிட்ட பல தெய்வங்களையும் தரிசிக்கலாம்.
திருமணத் தடை நிவாரணம்
திருமணத் தடை நிவாரணம் திருமணத்தில் தடை இருப்பவர்கள் இங்கு வந்து சிவனுக்கும் அம்மனுக்கும் மாலைகள் சூட்டி அர்ச்சனை செய்தால், வழி திறக்கும் என்ற மகா நம்பிக்கை உள்ளது. அர்ச்சகர் தரும் மாலையை அணிந்து கோவிலை ஒரு முறை வலம் வந்து, அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதும் இத்தலத்தின் சிறப்பு. திருமணம் நடந்த பின், தம்பதிகள் மீண்டும் இங்கு வந்து பழைய மாலையை கோவிலில் சமர்ப்பித்து, புதிய மாலை கட்டி சிவஅம்பிகையை வழிபடுவது புனிதமாக கருதப்படுகிறது.
சாந்தானப் பிராப்திக்கான பரிகாரம்
சாந்தானப் பிராப்திக்கான பரிகாரம் இன்னும் ஒரு முக்கிய நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு தொட்டில் கட்டி வழிபட்டால் மனமார்ந்த விருப்பம் நிறைவேறும் என்பதுதான். சித்திரை ஆண்டு பிறப்பின் சிறப்பு சித்திரை வருடப் பிறப்பு நாளில் இங்கு இரவு தங்கி காலையில் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை தரும் என பக்தர்கள் நம்புகின்றனர்
போக்குவரத்து வசதி கும்பகோணம்–மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் சென்னையிலிருந்து புதுச்சேரி, சிதம்பரம், கடலூர் வழியாக வரும் பேருந்துகள் அனைத்தும் இந்தத் தலம் அருகே செல்கின்றன. மயிலாடுதுறை நகராட்சி பேருந்துகளும் நேரடியாக திருமணஞ்சேரி வரை செல்வது பயணிகளுக்கு பெரும் வசதியாக இருக்கிறது.
ஒரு நம்பிக்கை… ஒரு மாற்றம்! திருமணஞ்சேரிக்கு ஒருமுறை சென்று பிரார்த்தனை செய்த பலரும், “அடுத்த தடவையே நாங்களே ஜோடியா வந்தோம்!” என்று பகிர்ந்துகொள்வதே இந்தத் தலத்தின் அசாதாரண ஆன்மீக ஈர்ப்பை காட்டுகிறது.