Spiritual: ராகு காலத்தில் என்ன செய்யலாம் தெரியுமா?! ராகுகால வழிபாட்டுக்கு இவ்ளோ பவரா?
ராகு காலம் சுப செயல்களுக்கு ஏற்றதல்ல எனக் கருதப்பட்டாலும் இது துர்க்கை அம்மனை வழிபடுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த நேரமாகும்.ராகுகாலத்தில் நெய் விளக்கேற்றி அம்மனை வேண்டினால் திருமண தடை, கடன் சுமை, உடல்நல குறைபாடுகள் போன்ற பல பிரச்சனைகள் நீங்கும்.

வழிபாடு செய்வதற்கு மிகச் சக்திவாய்ந்த காலம்
இந்து மரபில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட ஒன்றரை மணிநேரம் ராகு காலம் என அழைக்கப்படும். பொதுவாக இந்த நேரம் சுப செயல்களுக்கு ஏற்ற நேரம் அல்ல என்று கருதினாலும், வழிபாடு செய்வதற்கு மிகச் சக்திவாய்ந்த காலமாகவே நம் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. எந்த விதமான வாழ்க்கை பிரச்சனைகளாக இருந்தாலும், அவற்றை நீக்க சிறப்பு நேரம் இதுவென பண்டையோர் நம்பிக்கை.
உக்கிர தேவைகள் விரைவில் அருள் தருவர்
ராகுவின் அதிதேவதை துர்க்கை அம்மன். குறிப்பாக துர்க்கை, காளி போன்ற உக்கிர தேவைகள் விரைவில் அருள் தருபவர்களாக கருதப்படுகின்றனர். ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி அம்மனை வேண்டினால் மனக் கோரிக்கைகள் தடை இல்லாமல் நிறைவேறும் என்று ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள்.
தோஷங்கள் ஓடி ஒளியும்
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது திருமண தடைகளை நீக்கவும், கடன் சுமையை குறைக்கவும், வறுமை நீங்கவும், ராகு தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகவும் பயன்படும். வெள்ளிக்கிழமை ராகு காலம் குடும்ப நலன், கணவன்-மனைவி அமைதி, சேமிப்பு வளர்ச்சி, குழந்தைகளின் வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கு சிறப்பாக கருதப்படுகிறது.
எதிரி பிரச்சினைகள் காணாமல் போகும்
ஞாயிற்றுக்கிழமை வரும் ராகு காலத்தில் வழிபட்டால் உடல்நல குறைபாடுகள், எதிரி பிரச்சினைகள், வெளிநாட்டு முயற்சிகள், பிரிந்த உறவுகள் இணைவு போன்றவை சாதகமாக அமையும். வீட்டில் வழிபட விரும்புபவர்கள் சிவப்பு துணி விரித்து அதன்மேல் துர்க்கை அம்மன் படத்தை வைத்து நெய் விளக்கேற்றி செவ்வரளி அல்லது மல்லிகை மலர்கள் தூவி பூஜை செய்யலாம். எலுமிச்சை சாதம், பானகம் போன்ற எளிய நைவேத்யமும் போதும். துர்க்கை மந்திரம் அல்லது அம்மன் நாமம் 108 முறை ஜபிப்பதும் நல்ல பலனை தரும்.
மனதில் இருந்த தடைகள் அகலும்
தொடர்ச்சியாக ராகு காலத்தில் விளக்கேற்றி அம்மனை வேண்டுகையில், மனதில் இருந்த தடைகள் மெதுவாக அகன்று, நம்பிக்கை, அமைதி, முன்னேற்றம் ஆகியவை வாழ்க்கையில் நிலைப்பெறும் என்று நம்பப்படுகிறது.