MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • பட்டப்பகலில் நடுரோட்டில் கதறிய காதல் மனைவி சரஸ்வதி! விடாத விஜய்! அதுவும் பொதுமக்கள் மத்தியில் இப்படியா?

பட்டப்பகலில் நடுரோட்டில் கதறிய காதல் மனைவி சரஸ்வதி! விடாத விஜய்! அதுவும் பொதுமக்கள் மத்தியில் இப்படியா?

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது காதல் மனைவியை கணவரே பொதுமக்கள் மத்தியில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிய செவிலியரான சரஸ்வதியை, அவரது கணவர் விஜய் வழிமறித்து தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Nov 15 2025, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காதல் திருமணம்
Image Credit : Google

காதல் திருமணம்

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் விஜயவாடா சூர்யாராவ்பேட்டையில் வசிப்பவர் விஜய் (28). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (25). அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தார். இருவரும் கடந்த 2022ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

24
மனைவி இடையே அடிக்கடி தகராறு
Image Credit : Asianet News

மனைவி இடையே அடிக்கடி தகராறு

திருமணத்திற்கு பிறகு விஜய்க்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இவரை போக்கு சரியில்லாததால் கணவரை பிரிந்து சரஸ்வதி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதனால் காதல் மனைவி மீது விஜய் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

Related Articles

Related image1
12 பேர் ஜாமீனில் வந்து இருக்காங்க! ஒருத்தரையாவது போடணும்! ஸ்கெட்ச் போட்ட ஆம்ஸ்ட்ராங் வலது கரம்!
Related image2
நீங்க ஒன்னும் குற்றவாளி இல்ல! எதுக்கு வழக்கை கண்டு அஞ்சுறீங்க! கே.சி.வீரமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சுப்ரீம் கோர்ட்!
34
 காதல் மனைவி கொலை
Image Credit : Asianet News

காதல் மனைவி கொலை

இந்நிலையில் சரஸ்வதி வழக்கம்போல் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று பின்னர் வேலை முடிந்து மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார்.அப்போது மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது அங்கு வந்த விஜய்க்கும் சரஸ்வதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதல் மனைவியை பொதுமக்கள் மத்தியில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

44
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை
Image Credit : our own

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை

அவர் உயிரிழந்தை உறுதிப்படுத்திய பிறகே விஜய் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக சூர்ய ராவ் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் விஜயை மடக்கி பிடித்தனர். பின்னர் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் மத்தியில் காதல் மனைவியை கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
காவல்
கணவன்
மனைவி
மருத்துவமனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
Recommended image2
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
Recommended image3
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!
Related Stories
Recommended image1
12 பேர் ஜாமீனில் வந்து இருக்காங்க! ஒருத்தரையாவது போடணும்! ஸ்கெட்ச் போட்ட ஆம்ஸ்ட்ராங் வலது கரம்!
Recommended image2
நீங்க ஒன்னும் குற்றவாளி இல்ல! எதுக்கு வழக்கை கண்டு அஞ்சுறீங்க! கே.சி.வீரமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சுப்ரீம் கோர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved