- Home
- Politics
- பீகாரில் மரண அடி..! நாதியற்றுப்போன காங்கிரஸ்- தவெக..! உன்னை நம்பி நான் கெட்டேன்... என்னை நம்பினால் நீ கெட்ட.!
பீகாரில் மரண அடி..! நாதியற்றுப்போன காங்கிரஸ்- தவெக..! உன்னை நம்பி நான் கெட்டேன்... என்னை நம்பினால் நீ கெட்ட.!
இப்போது ஆரம்பிக்கப்பட்ட கட்சி தவெகவை நம்பி சென்றால் என்னவாகும்? என்கிற சந்தேகம் காங்கிரஸ்க்கும் எழும். ஆகையால் காங்கிரஸ் கட்சி இப்போது திமுகவிடம் அனுசரணையாக செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளிவிடப்பட்டுள்ளது.

பீகார் தேர்தலுக்கு முன்பு, பீகார் தேர்தலுக்கு பின்பு என காங்கிரஸின் நிலைமை தள்ளிவிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடக்கக்கூடிய மாநிலங்களில் தேசிய கட்சியான காங்கிரஸ் வலிமையாக இருக்க வேண்டும். ஆனால் அந்த கட்சியின் கட்டமைப்பு பலவீனமாக இருக்கிறது என்கிற பார்வை முன்வைக்கப்படுகிறது. தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் தாக்கம் பீகார் தேர்தலுக்கு முன்பு, பீகார் தேர்தலுக்கு பின்பு என வகைப்படுத்தலாம். பீகார் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியிலேயே எங்களுக்கும் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும், மந்திரி சபையில் கூட்டணி என்பது போன்ற கோரிக்கைகள் எல்லாம் முன்வைத்து வந்தனர்.
இன்னும் ஒரு படி மேலே சென்று விஜயுடன் கூட்டணி அமைத்தால்கூட நன்றாக இருக்கும். நேர்பாதி தொகுதிகளை பிரித்துக் கொள்ளலாம் என நினைக்கக்கூடிய ஒரு மனப்பக்குவம் காங்கிரஸில் உள்ள ஒரு தரப்புக்கு ஏற்பட்டது. அப்படியெல்லாம் கணக்கு போட்டு வந்தார்கள் காங்கிரஸ் கட்சியினர். பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கினால் என்ன நடக்கும் என்பதை பாரதிய ஜனதா உணர்ந்து இருக்கிறது. இதுதான் 2011 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நடந்தது. கிட்டத்தட்ட 63 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், வெறும் ஐந்து தொகுதிகளில்தான் காங்கிரஸ் ஜெயித்தது.
கட்சியினுடைய கட்டமைப்பை பலப்படுத்தாமல் பாஜக எதிர்ப்பு என்கிற ஒற்றைப் புள்ளியில் மட்டுமே வைத்து அறுவடை செய்து விடலாம் என்பது காங்கிரஸ் கட்சியின் ஒரு வளமான கற்பனை. முதலில் கிராமங்கள் தோறும் கட்சியை பலப்படுத்த வேண்டும். கட்சிக்குள் இளைய ரத்தங்களை பாய்ச்ச வேண்டும். இப்போது காங்கிரஸில் புதிதாக எந்த இளைஞரும் சேர்வது இல்லை. ஒட்டுமொத்த தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களை தவிர இளைஞர்களை தவிர காங்கிரஸ் பக்கம் செல்லவில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எங்கேயுமே இளைஞர்கள் காங்கிரசை நாடிச் செல்வதில்லை. பாஜக எதிர்ப்பு என்பதை மட்டுமே மையப்படுத்தி காங்கிரஸ் வளர்ந்து விட முடியாது.
பீகார் தேர்தலுக்குப் பின்பு காங்கிரஸ் கட்சி தங்களது பேர வலிமையை இழந்து இருக்கிறார்கள். அதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்துகிறது. ஒரு பெரிய இன்னொரு அபாய சிக்கல் என்னவென்றால், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும் பொழுது, அது எந்தவிதமான பலனை அளிக்கிறது என்பதை இந்த தேர்தல் உணர்த்திருக்கிறது. தமிழக தேர்தலை பொருத்தவரை பீகார் தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தலாம் என எண்ணிக்கொண்டு இருந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. ஒருவேளை திமுகவிடம் அதிக தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் காங்கிரஸ் தவெக பக்கம் செல்வதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் எல்லா கட்சியும் காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதை தாண்டி, காங்கிரஸ் கட்சி பலம் இழந்து விட்டதாக நினைக்கின்றனர்.
இப்போது தவெக பக்கம் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வரலாம் என்கிற எண்ணமும் தவிடு பொடியாகி இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் விழாவிற்கு பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தார்கள். அவர் ஒரு பெரிய தேர்தல் வியூக வகுப்பாளர். கிட்டத்தட்ட இந்தியாவை ஆளுகின்ற கட்சிகளுக்கும், தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிற கட்சிக்கும் தேர்தல் வேலைகளை ஆரம்ப காலகட்டத்தில் பார்த்தவர். அப்படிப்பட்டவரை ஒரு செய்தியை சொல்வதற்காக தான் தவெக அழைத்து வந்தது. இப்போது அவரது நிலைமை பீகாரில் ஜன் சுராஜ் ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. காங்கிரஸார் அந்த இடத்தையும் இப்போது ஆலோசிப்பார்கள்.
இப்போது இருக்கிற கூட்டணி ஒரு பாதுகாப்பான கூட்டணி என அவர்கள் இப்போது திமுகவை உணர்வார்கள். அதே நேரத்தில் காங்கிரஸ் அதையும் மீறி பேர வலிமை, சீட்டு என கணக்கு போட்டு தவெகவுடன் காங்கிரஸ் சேர்ந்தால் திமுகவும் பலத்த சேதம் ஏற்படும். ஆனால் அது காங்கிரஸுக்கு பலன் தருமா? என்பதை நாம் சொல்ல முடியாது. காங்கிரஸுக்கு இப்போது வாய்ப்புகள் சுருக்கப்பட்டு இருக்கிறது என்று உணரலாம். நேற்று வரை பிகார் தேர்தல் ரிசல்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஒரு நல்ல ஆப்சனாக இருந்திருக்கும். பீகாரில் ஒரு மாற்று சக்தியாக பார்க்கப்பட்ட இளைஞர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜன் சுராஜ் கட்சி நிலமை என்னவாயிற்று? என்பதை பார்க்க வேண்டும். அவர் ஒரு தேர்தல் வியூக வகுப்பாளர், வல்லுனர். அவருக்கே இதுதான் நிலைமை என்றால் தமிழகத்தில் கட்டமைப்பு இல்லாத, இப்போது ஆரம்பிக்கப்பட்ட கட்சி தவெகவை நம்பி சென்றால் என்னவாகும்? என்கிற சந்தேகம் காங்கிரஸ்க்கும் எழும். ஆகையால் காங்கிரஸ் கட்சி இப்போது திமுகவிடம் அனுசரணையாக செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளிவிடப்பட்டுள்ளது.