இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:36 AM (IST) Sep 12
Rishabh Shetty Kantara 1 worldwide release in 30 plus countries : ரிஷப் ஷெட்டியின் காந்தாரா அத்தியாயம் 1 படத்திற்காக நாடு முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காந்தாரா 1 திரைப்படம் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 7 மொழிகளில் வெளியாகவுள்ளது.
11:54 PM (IST) Sep 11
Bangladesh Beats Hong Kong in Asia Cup: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. லிட்டன் தாஸ் அதிரடி அரை சதம் விளாசினார். இது ஹாங்காங் அணிக்கு 2வது தோல்வியாகும்.
11:36 PM (IST) Sep 11
பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம், குஜராத்தில் சிங்கங்களின் மரணம், நேபாள அரசியல் திருப்பம், ஆளுநர் மாளிகை நவராத்திரி கொலு, 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி என பல்வேறு செய்திகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.
11:21 PM (IST) Sep 11
Kathir Saves Raji at His House : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் வீட்டிற்கு வந்த கதிர் மற்றும் ராஜீயிடம் என்ன நடந்தது என்பது பற்றி எல்லோருமே கேள்வி எழுப்பினர்.
10:52 PM (IST) Sep 11
21ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி லெவனை விஸ்டன் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து இரண்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி இடம் பெறவில்லை.
10:43 PM (IST) Sep 11
OpenAI-யின் முன்னாள் ஊழியர் சுசிர் பாலாஜியின் மரணம் தற்கொலை என அறிவிக்கப்பட்ட நிலையில், எலான் மஸ்க் அதை கொலை எனக் குற்றம் சாட்டியுள்ளார். பாலாஜி, OpenAI-யிலிருந்து விலகி, ChatGPT பற்றி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
10:21 PM (IST) Sep 11
Asia Cup 2025: Hong Kong vs Bangladesh: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசதுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 143 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் யாசிம் முர்தாசா அதிடியாக விளையாடினார்.
10:18 PM (IST) Sep 11
Senthil Doubt his Wife Meena Phone Call : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 583ஆவது எபிசோடில் காரில் வந்து கொண்டிருக்கும் போதே மிட் நைட் 1.30 மணிக்கு மீனாவிற்கு போன் போட்ட ராஜீயால் செந்திலுக்கு சந்தேகம் வந்தது.
10:04 PM (IST) Sep 11
கேரளாவின் வடக்கு மாவட்டங்களில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்களைத் தடுக்க, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்ட விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
09:20 PM (IST) Sep 11
சென்னை ஐஐடி ஆசிரியர்களுக்காக இலவச ஆன்லைன் AI படிப்பை வழங்குகிறது. கற்பித்தல் முறையில் AI-யை ஒருங்கிணைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சான்றிதழ் பெற அக்டோபர் 10-க்குள் விண்ணப்பிக்கவும்.
09:09 PM (IST) Sep 11
பேங்க் ஆப் பரோடாவின் துணை நிறுவனத்தில் 70 வேலைகள். Business Development Manager பணிக்கு 12வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை, சம்பளம் ரூ.30,000 வரை.
08:58 PM (IST) Sep 11
டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க்கின் படுகொலையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆனால் கொலையாளி இன்னும் தலைமறைவாக உள்ளார். இந்த சம்பவம் உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்தது. டிரம்ப் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
08:57 PM (IST) Sep 11
வடபழனி முருகன் கோயிலில் தேவார ஆசிரியர், இசை ஆசிரியர், தமிழ் ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு கிடையாது, நேர்காணல் மூலம் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
08:56 PM (IST) Sep 11
சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் 16 மாவோயிஸ்டுகள் போலீசில் சரணடைந்துள்ளனர்.
08:40 PM (IST) Sep 11
ஒவ்வொரு ஐபோன் விளம்பரத்திலும் 9:41 AM நேரம் ஏன் காட்டப்படுகிறது? முதல் ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்று தருணத்தின் நினைவாக இந்த பாரம்பரியம் தொடர்கிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
08:39 PM (IST) Sep 11
Virat Kohli-Anushka Sharma: நியூசிலாந்து கஃபே ஒன்று விராட் கோலியையும், அனுஷ்கா சர்மாவையும் வெளியேற்றியுள்ளது. இது குறித்த தகவலை இந்திய வீராங்கனை தெரிவித்துள்ளார். உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
08:22 PM (IST) Sep 11
ஷார் டேங்கின் கெவின் ஓ'லியரி, ஸ்டீவ் ஜாப்ஸின் "சிக்னல்-டு-நாய்ஸ்" ரகசிய ஃபார்முலாவை வெளிப்படுத்தினார். இது ஆப்பிளை ஒரு உலக நிறுவனமாக மாற்றியது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
08:07 PM (IST) Sep 11
யூடியூப் தளத்தின் புதிய பல மொழி ஆடியோ அம்சம், ஒரே வீடியோவில் பல மொழி டிராக்குகளைச் சேர்க்க உதவுகிறது. இது இந்திய கிரியேட்டர்களுக்கு புதிய பார்வையாளர்களை ஈர்க்கும்.
08:05 PM (IST) Sep 11
07:30 PM (IST) Sep 11
Raghava Lawrence turns his own House into a school : இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தான் முதல் முறையாக கட்டிய வீட்டை இப்போது பள்ளிக் கூடமாக மாற்ற இருப்பதாக கூறியுள்ளார்.
07:19 PM (IST) Sep 11
TET Exam: டெட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. இதனால் அரசு பள்ளி ஆசியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
07:17 PM (IST) Sep 11
07:01 PM (IST) Sep 11
இவரை நம்பி எப்படி பின்னால் பயணிப்பார்கள் அதிமுக தொண்டர்கள் என செங்கோட்டையன் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இதையே தனக்கு சாதகமாகவும் பயன்படுத்திக்க நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
06:38 PM (IST) Sep 11
மொஹாலியில் கடன் தொல்லை மற்றும் மிரட்டல் காரணமாக 45 வயதான தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார். தனது வணிகத்தில் முதலீடு செய்த ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தன்னை மிரட்டியதாகவும் தற்கொலைக்கு முன் பதிவு செய்த வீடியோவில் கூறியுள்ளார்.
06:21 PM (IST) Sep 11
கூட்டணி கட்சியினுடைய தலைமையைப்போய் டெல்லியில் சந்தித்து வந்திருக்கிறார். இதற்கு எப்படி அனுமதி கொடுக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா என பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் எடப்பாடி
06:08 PM (IST) Sep 11
சம்பந்தி இறந்த துக்கத்தில் இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின் கடமை தவறாமல் ஓசூரில் 2 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் 400 பேருக்கு வேலை கிடைக்கும்.
06:07 PM (IST) Sep 11
சைபர் மோசடிகளைத் தடுக்க, வங்கிகளும் யுபிஐ செயலிகளும் மொபைல் எண்ணின் உரிமையை சரிபார்க்கும் புதிய அமைப்பு விரைவில் வருகிறது. இது மோசடி கணக்குகளைக் கட்டுப்படுத்த உதவும்.
05:54 PM (IST) Sep 11
Thoothukudi:கோவில்பட்டியில் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் சடலம் மீட்கப்பட்டது. சக்தி கணேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
05:53 PM (IST) Sep 11
சாம்சங் கேலக்ஸி F17 இந்தியாவில் ₹13,999 முதல் அறிமுகம். 50MP OIS கேமரா, ஜெமினி லைவ் போன்ற AI அம்சங்கள், மற்றும் ஸ்லிம் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போன். மூன்று வகைகளில் கிடைக்கிறது.
05:49 PM (IST) Sep 11
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. தற்போது சில முக்கியமான ரயில்கள் மீண்டும் எக்மோர் நிலையத்தில் இயக்கப்ட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
05:44 PM (IST) Sep 11
முடி உதிர்தலை தடுக்க குளிக்கும் போது செய்யக்கூடாத சில பழக்கங்களை குறித்து பதிவில் பார்க்கலாம்.
05:32 PM (IST) Sep 11
05:11 PM (IST) Sep 11
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
05:07 PM (IST) Sep 11
பாம்புகளை வீட்டிற்குள் ஈர்க்கும் 5 வகையான விஷயங்களை இங்கு காணலாம்.
05:06 PM (IST) Sep 11
Sengottaiyan: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
05:03 PM (IST) Sep 11
Revathi Making First Night Arrangements : தங்கை துர்காவிற்கு மட்டும் முதலிரவு நடக்கும் நிலையில் தனக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடக்க வேண்டும் என்று ரேவதி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
04:46 PM (IST) Sep 11
அமெரிக்காவின் பிரபல வலதுசாரி பிரபலம் சார்லி கிர்க், உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பல்கலைக்கழக கட்டிடத்தின் கூரை மீது இருந்ததாகக் கூறப்படுகிறது.
04:13 PM (IST) Sep 11
Sivanandi Cheating Chamudeshwari : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சாமூண்டீஸ்வரிக்கு சொந்தமான வீட்டை அவரது தங்கை சந்திரகலா கணவர் சிவனாண்டி எழுதி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.
04:09 PM (IST) Sep 11
Asia cup 2025: India vs Pakistan Match: ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கான வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காடிக்கெட்டுகள் விற்பனையாகாமல் உள்ளன. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
03:59 PM (IST) Sep 11
School Teacher: சென்னை ஐஐடி, பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான இலவச ஆன்லைன் படிப்புகளை வழங்குகிறது. அக்டோபர் 10ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்