- Home
- Tamil Nadu News
- பாண்டியன், ராக்போர்ட் ரயில்கள் மீண்டும் எழும்பூரில் இருந்தே புறப்படும்.! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
பாண்டியன், ராக்போர்ட் ரயில்கள் மீண்டும் எழும்பூரில் இருந்தே புறப்படும்.! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. தற்போது சில முக்கியமான ரயில்கள் மீண்டும் எக்மோர் நிலையத்தில் இயக்கப்ட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூரில் ரயில் நிலைய பராமரிப்பு பணி
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து சில ரயில்கள் கடந்த சில நாட்களாக தற்காலிகமாக தாம்பரம் மற்றும் சென்னை பீச் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.
இதன் காரணமாக மதுரை மற்றும் திருச்சி செல்லும் பயணிகள் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக, சில முக்கியமான ரயில்கள் மீண்டும் எக்மோர் நிலையத்தில் இருந்து இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தனது அறிக்கையில் அறிவித்துள்ளது.
மீண்டும் எக்மோர் நிலையத்தில் இருந்து இயங்கும் ரயில்கள்
ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் (12653/12654) (சென்னை எக்மோர் – திருச்சி – சென்னை எக்மோர்) 17 செப்டம்பர் 2025 முதல் மீண்டும் எழும்பூரில் இருந்தே புறப்படும் எனவும் இதே போல திருச்சியில் இருந்து எழும்பூருக்கே வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்- 12638 )மதுரை – சென்னை எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 17 முதல் எக்மோரிலிருந்து இயங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல (ரயில் எண் 12637) பாண்டியன் எக்ஸ்பிரஸ் (சென்னை – மதுரை) வழக்கம்போல் எக்மோருக்கு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்- 22675 ) சென்னை – திருச்சி இடையிலான இந்த ரயில் செப்டம்பர் 18 முதல் எக்மோரிலிருந்து புறப்படும் எனவும் (ரயில் எண் 22676) சோழன் எக்ஸ்பிரஸ் (திருச்சி – சென்னை) வழக்கம்போல் எக்மோர் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்/சென்னை பீச்சில் இருந்து இயங்கும் ரயில்கள்
உழவன் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16865/16866 ) (தஞ்சாவூர் – சென்னை) செப்டம்பர் 17 முதல் நவம்பர்10 வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும் எனவும், இதே போல தஞ்சாவூரில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20635/20636 ) கொல்லம் – சென்னை ரயில் செப்டம்பர் 17 முதல் நவம்பர் 10 வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து இயங்கும் ரயில்
சேது எக்ஸ்பிரஸ் (22661/22662) சென்னை – ராமேஸ்வரம் ரயிலும் மற்றொரு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16751/16752) ஆகியவை செப்டம்பர் 11 முதல் நவம்பர் 10 வரை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எக்மோர் – மும்பை (ரயில் எண் 22158) CSMT எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 11 முதல் 10 நவம்பர் 2025 வரை சென்னை பீச் நிலையத்தில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்படுள்ளது. அதே நேரம் மும்பை – சென்னை எக்மோர் ரயில் வழக்கம்போல் எக்மோர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு அறிவிப்பு
பயணிகள் தங்கள் பயணத்திற்கு முன் NTES (National Train Enquiry System) மூலம் ரயில்களின் புறப்படும்/முடியும் நிலையம் மற்றும் நேரங்களை சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்த புதிய அட்டவணை 11 செப்டம்பர் முதல் 10 நவம்பர் 2025 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.