- Home
- Tamil Nadu News
- 100க்கும் மேற்பட்ட கார்கள்! கெத்து காட்டிய நிர்வாகிகள்! உற்சாகத்தில் செங்கோட்டையன்! அலறும் இபிஎஸ்!
100க்கும் மேற்பட்ட கார்கள்! கெத்து காட்டிய நிர்வாகிகள்! உற்சாகத்தில் செங்கோட்டையன்! அலறும் இபிஎஸ்!
Sengottaiyan: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

செங்கோட்டையன்
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றியணைக்கும் பணியை 10 நாட்களுக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும். இல்லையென்றால் பிரிந்தவர்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் எச்சரித்திருந்தார். இதனையடுத்து அடுத்த நாளே செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சி பொறுப்புகளில் அதிரடியாக நீக்கினார்.
டிடிவி.தினகரன்
இதனையடுத்து செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ், டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் அதிமுக நிர்வாகிகள் தங்களது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்த நகர்வு குறித்து செங்கோட்டையன் நிர்வாகிகளுடன் அவரது இல்லத்தில் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள்
இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க அவரது இல்லத்திற்கு வருகை தந்தனர். அமமுக துணை பொதுச்செயலாளர் சண்முகவேலு தலைமையிலான மேற்கு மாவட்டங்களை சேர்ந்த அமமுவினர் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அமமுக துணை பொதுச்செயலாளர் சண்முகவேலு
சண்முகவேலு உள்பட சில நிர்வாகிகள் மட்டும் செங்கோட்டையனை 15 நிமிடங்கள் தனியாக சந்தித்து பேசினர். அதனைத் தொடர்ந்து, அமமுக துணை பொதுச்செயலாளர் சண்முகவேலு செய்தியாளர்கள் சந்திப்பில்: அமமுக மேற்கு மண்டலம் சார்பில் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைய வேண்டும் எனக்கூறிய செங்கோட்டையனை சந்தித்துள்ளோம் மற்றவை அனைத்தும் தலைவர் டிடிவி தினகரன் சொல்வார். நாங்கள் நிர்வாகிகள் எங்களினால் எந்த கருத்துகளையும் சொல்ல இயலாது. எல்லோரும் இணைய வேண்டும் என தலைவர் டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் உள்ளனர். நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்றார்.