- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Hair Washing Mistakes : குளிக்குறப்ப இதை மட்டும் பண்ணாதீங்க! அப்புறம் முடி கொட்டுறத தடுக்க முடியாது
Hair Washing Mistakes : குளிக்குறப்ப இதை மட்டும் பண்ணாதீங்க! அப்புறம் முடி கொட்டுறத தடுக்க முடியாது
முடி உதிர்தலை தடுக்க குளிக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகளை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக சூடான நீர்
தலைக்கு குளிக்கும்போது எப்போதுமே முதலில் சூடான நீரில் குளிப்பது நல்லது. அப்போதுதான் உச்சந்தலையில் குவிந்திருக்கும் எண்ணெய், அழுக்குகள் நீங்கும். ஆனால் அதிக சூடான நீரில் அல்ல. அதிக சூடான நீரில் குளித்தால் உச்சந்தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெய்கள் நீங்கிவிடும். முடியும் வறண்டு போகும்.
நேரடியாக ஷாம்பு பயன்படுத்தாதே
நேரடியாக தடவுவதற்கு பதிலாக முதலில் குளிக்கும் கப்பில் கொஞ்சமாக அதனுடன் நிறைய தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து எப்போதும் போல ஷாம்பு போட்டு குளிக்கவும். இப்படி நீங்கள் ஷாம்பு போட்டு குளிப்பதன் மூலம் ஷாம்புவில் இருக்கும் ரசாயனங்களில் விளைவு குறையும். அதுபோல ஷாம்பு போடும்போது விரல் நுனியால் உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்யவும். இதனால் ரத்த ஓட்டம் மேம்படும் அழுக்குகளும் முழுமையாக நீங்கும்.
சல்பேட் இல்லாத ஷாம்பூ
சல்பேட் ஷாம்புகள் முடியிலிருந்து ஈரப்பதத்தை அகற்றி உச்சந்தலையை வறட்சியைக்கிவிடும். எனவே சல்பேட் இல்லாத ஷாம்பூவை பயன்படுத்துங்கள். அதுதான் உச்சந்தலையில் இருக்கும் ஈரப்பதத்தை பராமரிக்க உதவும்.
குளிர்ந்த நீர்
கடைசியாக குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசவும். இதனால் முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். அதுமட்டுமல்லாமல் உச்சந்தலையில் மேற்பகுதியையும் மூடும்.
எண்ணெய் மசாஜ்
தலைக்கு குளிப்பதற்கு முன் சிறிது நேரம் தலையில் எண்ணெய் தேய்த்து நன்கு மசாஜ் செய்து பிறகு குளிக்கவும். இப்படி செய்தால் முடியின் வேர்கள் பலப்படும்.
அழுத்தி தேய்காதே!
தலைக்கு குளித்த பிறகு துண்டால் முடியை அழுத்தி துடைத்தால் முடி உடையும். அதற்கு பதிலாக மென்மையாக அழுத்தி உலர வையுங்கள்.