இரவில் ஏன் தலைக்கு குளிக்க கூடாது? அதனால் என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதை இங்கு காணலாம்.
இன்றைய ஸ்பீடான வாழ்க்கை முறையால் எல்லாராலும் காலையிலே எழுந்து தலைக்கு குளிப்பது என்பது சவாலான காரியமாகும். இதனால் பெரும்பாலானோர் காலையில் குளிப்பதை தவிர்க்கிறார்கள். அதற்கு பதிலாக இரவு நேரத்தில் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். நேரத்தை மிச்சப்படுத்தும் என்று நினைத்து அவர்கள் செய்யும் இந்த தவறு அவர்களது தலைமுடியை எவ்வளவு சேதப்படுத்தும் என்று தெரிவதில்லை. இது குறித்த முழு விளக்கத்தை இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இரவு தலைக்கு குளித்தால் ஏற்படும் பிரச்சனைகள் :
1. முடிவின் பாதுகாப்பு தடை பலவீனமாகும்
இரவில் தலைக்கு குளிப்பதால் ஈரமான தலையுடன் தூங்கச் செல்கிறோம். இதனால் முடி எளிதில் உடையக்கூடியதாக மாறிவிடுகிறது. மேலும் முடியின் வேர்களின் செதில்கள் தளர்ந்து, பாதுகாப்பு தடை வலுவிழந்து, முடிக்கு ஏற்படும் சேதங்களை அதிகரிக்கச் செய்யும்.
2. பொடுகு தொல்லை அதிகரிக்கும்
ஈரத் தலையுடன் படுக்கைக்கு செல்வதால் உச்சந்தலையில் ஈரப்பதம் அப்படியே இருக்கும். இதனால் உச்சந்தலையில் பல பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக பொடுகு வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
3. முடி உதிர்தல் அதிகரிக்கும்
பொதுவாகவே ஷாம்பு போட்டு குளித்த பிறகு தலைமுடி அதிகமாகவே உதிரும். அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் குளித்த பிறகு ஈரமான தலைமுடியுடன் தூங்கு செல்வதால் முடியின் வேர் வழுவழுந்து முடி உதிர்தலை ஊக்குவிக்கும். மேலும் காலையில் சிக்கு அதிகமாக இருக்கும். இதனால் முடி உடைவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
4. முடியிம் தரம் குறையும்
இரவு ஈரத் தலையுடன் தூங்குவதால் மறுநாள் காலையில் உங்கள் தலைமுடி பிசுபிசுவென்று இருக்கும். இந்த பழக்கம் தொடர்ந்து செய்து வந்தால் முடியும் தரம் முற்றிலும் குறைந்து விடும்.
பிற ஆபத்துகள் :
இரவில் தலைக்கு குளிப்பது தலைமுடி ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சில உடல்நிலை பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். அதாவது இரவு தலைக்கு குளிப்பதை வழக்கமாக்கி கொண்டால் தலைவலி, சளி, காய்ச்சல், சைனஸ் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். குறிப்பாக இரவில் எண்ணெய் தேய்த்து ஒருபோதும் குளிக்கவே கூடாது.
ஒருவேளை நீங்கள் இரவில் தலைக்கு குளிக்க விரும்பினால் இரவை 7 மணிக்கு முன்பாக குளித்து விடுங்கள். குளித்த பிறகு தலைமுடியை நன்கு காய வைத்து பிறகு படுக்கைக்கு செல்லவும். இல்லையெனில் உங்களது கூந்தல் தான் பாதிப்படையும்.
