Itchy After Bath : குளிச்சுட்டு வந்த பின்னும் அரிப்பு ஏற்படுகிறதா? காரணம் இதுதான்!!
குளித்துவிட்டு வந்த பிறகும் சருமத்தில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணம் மற்றும் அதை சரிசெய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Itchy After Bath
சிலருக்கு குளித்துவிட்டு வந்த உடனே சருமத்தில் அரிப்பு ஏற்படும். இதற்காக அவர்கள் பாடி லோஷன் பயன்படுத்துவார்கள். குளித்தவுடன் ஏற்படும் இந்த அரிப்புக்கு மருத்துவ ரீதியில் அக்வாஜெனிக் ப்ரூரைட்டிஸ் (aquagenic pruritus) என்று பெயர். இது தண்ணீருடன் தொடர்புடையது. கடுமையான எரிப்பு அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். இந்த அரிப்பு எந்தவித காயங்களையும் ஏற்படாது. ஆனால் குளித்த ஒரு மணி நேரம் வரை இந்த பிரச்சனை இருக்கும். இந்த அரிப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னென்ன? இந்த அரிப்பை சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நீர் மற்றும் வெப்பநிலை :
குளித்துப் பிறகு அரிப்பு ஏற்படுவது பெரும்பாலும், நீர் மற்றும் வெப்பநிலை உங்களது சருமத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதன் காரணமாக அமைகின்றது. பொதுவாக நம்முடைய சருமத்தில் ஒரு பாதுகாப்பு அடுக்கு ஒன்று உள்ளது. இந்த அடுக்கு பாதிக்கப்படும்போதுதான் சருமத்தில் குளித்த பிறகு எரிச்சல், கூச்ச உணர்வு, அரிப்பு ஏற்படுகிறது.
வெதுப்பான நீர் மற்றும் நீண்ட குளியல் :
பொதுவாக சோர்வாக இருக்கும் போது அல்லது கை, கால்கள், உடம்பு வலி இருக்கும் போது சூடான நீரில் குளிக்க விரும்புவோம். சூடான நீர் குளியல் உடலுக்கு ஆற்றலை தரும். எனவே பெரும்பாலானூர் சூடான நீரில் நீண்ட நேரம் குளிப்பார்கள். ஆனால் அப்படி குளிப்பது உங்களது சருமத்தை உணர்த்துவது மட்டுமல்லாமல் உணர்திறன் மிக்கதாகவும் ஆக்குகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் சூடான நீரில் குளிப்பது உங்களது சருமத்தை வறட்சியாக மாற்றிவிடும்.
வறண்ட சருமம்
சிலருக்கு இயற்கையாகவே வறண்ட சருமம் இருக்கும். இத்தகையவர்கள் சூடான நீரில் குளித்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தாவிட்டால் சருமம் இன்னும் வறண்டு போகும். வறண்ட சருமம் அதன் பாதுகாப்பு அடுக்கை இழக்கிறது. மேலும் உங்களது நரம்புகள் நீர் மற்றும் வெப்பநிலை மாற்றங்களுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக மாறிவிடும்.
சோப்பு மற்றும் ஷாம்பு
நீங்கள் பயன்படுத்தும் சோப்புகள் அல்லது ஷாம்புகளில் அதிகப்படியான வாசனை திரவியங்கள், சல்பேடுகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவை இருந்தால், அவை உங்களது சருமத்தை உலர்த்தி, சருமத்தை மேலும் எரிச்சல் அடைய செய்யும். இதனால் குளித்த பிறகும் சருமத்தில் அரிப்பு ஏற்படுகின்றது.
நீர்
நீங்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும் நீரில் அதிக அளவு கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இருந்தால் அவை உங்களது சருமத்தின் இயற்கையான சமநிலையை சீர்குலைத்துவிடும். இதன் விளைவாக குளித்த பிறகும் அரிப்பு ஏற்படும்.
உடலநல பிரச்சினைகள்
சில சமயங்களில் கல்லீரல் நோய், ஒவ்வாமை, ரத்தக் கோளாறு போன்ற சில பிரச்சனைகளாலும் குளித்த பிறகும் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளன. ஒருவேளை உங்களுக்கு சொறி ஏற்படுவதற்கான எந்த ஆதாரமும் இல்லாமல் அரிப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவரை பார்ப்பது தான் நல்லது.
குளித்த பிறகு ஏற்படும் அரிப்பை தவிர்ப்பது எப்படி?
- சூடான நீரில் குளிப்பதற்கு பதிலாக மிதமான சூட்டில் இருக்கும் நீரில் குளிக்கவும்
- உங்களது சருமம் வறண்டு போவதை தடுக்க அதிக நேரம் குளிக்க வேண்டாம்
- குளித்த உடனே ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்
- அதிக வாசனை திரவியங்கள் கொண்ட சோப்புகள் மற்றும் ஷாம்புகள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது