- Home
- Lifestyle
- Cold Water Bath : ஜிம் போய்ட்டு வந்து குளிர்ந்த நீரில் குளிக்கும் நபரா? இந்த தப்ப இனி பண்ணாதீங்க!!
Cold Water Bath : ஜிம் போய்ட்டு வந்து குளிர்ந்த நீரில் குளிக்கும் நபரா? இந்த தப்ப இனி பண்ணாதீங்க!!
ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வந்த பிறகு ஏன் குளிர்ந்து குளிக்க கூடாது என்பதற்கான காரணங்கள் குறித்து இங்கு காணலாம்.

ஜிம் உடற்பயிற்சி
ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பிறகு வியர்வை வருவது பொதுவானது. சிலர் உடற்பயிற்சிக்கு பிறகு தசை வலியை போக்க வெந்நீரில் குளிப்பார்கள். சூடான குளியல் கை கால் வலியை குறைத்து, உடலை இதமாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இன்னும் சிலரோ வியர்வையில் இருந்து தங்களது உடலை புத்துணர்ச்சியாக குளிர்ந்த நீரில் குளிப்பார்கள். இப்படி குளிப்பது உடற்பயிற்சிக்கான பலனை தராது என்று சிலர் கூறுகிறார்கள். அது உண்மையா? இல்லையா? என்று இந்த பதிவில் காணலாம்.
குளிர்ந்த நீர் குளியல் :
பொதுவாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்து விட்டு வந்த பிறகு குளிர்ந்த நீரில் குளிப்பது பரிக்கப்படுவதில்லை. குளிர்ந்த நீரில் குளியல் சில நன்மைகளை வழங்கினாலும், உடற்பயிற்சி செய்த உடனே குளிப்பது அது உடலுக்கு நன்மைக்கு பதிலாக எதிர்மறையான விளைவை தான் ஏற்படுத்தும். உடலில் திடீர் வெப்பநிலை மாற்றம், உடலில் இயற்கையான மீட்பு செயல்முறை தடுக்கப்படுதல் மற்றும் தசை விறைப்பு அல்லது பிடிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
ஜிம்மில் இருந்து வந்த பிறகு ஏன் குளிர்ந்த நீரில் குளிக்க கூடாது?
1. தசை விறைப்பு மற்றும் பிடிப்புகள் - ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு தசைகள் சூடாகவும், தளர்வாகவும் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் உடனே குளிர்ந்த நீரில் குளித்தால் அவற்றை சுருங்கி இறுக்கச் செய்துவிடும். இதனால் வலி, விறைப்பு தசை பிடிப்புக்கு வழிவகுக்கும்.
2. உடல் ஓய்வு தடுக்கப்படும் - உடற்பயிற்சிக்கு பிறகு உடலானது இயற்கையாகவே குளிர்ச்சியடைய நேரம் தேவை. ஆனால் உடனே குளிர்ந்த நீரில் குளித்தால் ரத்த நாளங்கள் சுருங்கி, தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்துவிடும்.
3. மூட்டு மற்றும் தசை வலி தாமதமாகும் - உடற்பயிற்சிக்கு பிறகு வீக்கம் மற்றும் தசை வலியை குறைக்க குளிர்ந்த நீர் குளியல் உதவினாலும், உடனே குளிப்பது உடலில் இயற்கையான மீட்பு செயல்முறையை தாமதப்படுத்தும்.
4. உடல் வேகம் - ஜிம்மிலிருந்து வந்த பிறகு உடல் சோர்வாக இருக்கும். இத்தகை சூழ்நிலையில், உடனே குளிர்ந்த நீரில் குளித்தால் அந்த சோர்வு இன்னும் அதிகரிக்கும். மேலும் உடலில் சக்தி இழப்புக்குள்ளாகும்.
மாற்று வழிகள்
- குளிர்ந்த நீருக்கு பதிலாக சூடான நீர் குளியல் தசைகளை தணிக்கவும், தளர்த்தவும், ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும் உதவும்.
- மேலும் நீங்கள் குளிப்பதற்கு முன்பாக நடைப்பயிற்சி அல்லது லேசான நீட்சி பயிற்சி செய்வதன் மூலம் உங்களது உடல் இயற்கையாகவே குளிர்ச்சியடையும்.
- நீங்கள் குளிர்ந்த நீரில் குளிக்க விரும்பினால் உடனே குளிர்ந்து நீரை கொண்டு உங்களது உடலை அதிர்ச்சிக்குள்ளாக்காமல், தண்ணீரை வெப்பநிலையை படிப்படியாக குறைக்க வேண்டும்.
தசைகளை வளர்க்க..
நீங்கள் உங்களது தசைகளை வளர்க்க விரும்பினால், குளிர்ந்த நீர் குளியல் குளிப்பதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் கடினமான பயிற்சிக்கு பிறகு உடனே குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர்ந்த நீரானது உடலின் தசைகளை வளர்க்கும் செயல் முறையை மெதுவாக்கிவிடும். அதாவது குளிர்ந்த நீரானது தசைகள் வளர மற்றும் சரி செய்ய உதவும் முக்கிய பாதைகளை செயல்படுத்துவதை கட்டுப்படுத்தும்.
அறிவியல் சொல்வது என்ன?
நீங்கள் தொடர்ந்து ஜமில் இருந்து வந்த பிறகு குளிர்ந்த நீரில் குளித்தால் தசையின் அளவு மற்றும் வலிமை அதிகரிப்பு குறைந்து விடும் என்று ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளன. குளிர்ந்த நீரானது உடலின் இயல்பான தசை வளர்ச்சி செயல்முறையை மெதுவாக்குவதும் மட்டுமின்றி, காலப்போக்கில் தசை வளர்ச்சியையும் குறைத்து விடுகிறது. ஒருவேளை நீங்கள் குளிர்ந்த நீரில் குளிக்க விரும்பினாலோ மற்றும் தசை வளர்ச்சி அடைய விரும்பினாலோ ஜிம்மிலிருந்து வந்த பிறகு குறைந்தது 2 மணி நேரம் கழித்து தான் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
கட்டுக்கதைகள் :
குளிர்ந்த நீரில் குளித்தால் கொழுப்பு கரையும் மற்றும் மன ரீதியான ஊக்கம் கிடைக்கும் என்ற ஒரு கட்டுக்கதை உள்ளது. ஆனால் இதற்கு வலுவான எந்த ஆதாரமும் இல்லை.