- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மிட்நைட்டில் மீனாவிற்கு வந்த போன் கால் – சந்தேகத்தால் தூக்கம் வராமல் தவித்த செந்தில்!
மிட்நைட்டில் மீனாவிற்கு வந்த போன் கால் – சந்தேகத்தால் தூக்கம் வராமல் தவித்த செந்தில்!
Senthil Doubt his Wife Meena Phone Call : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 583ஆவது எபிசோடில் காரில் வந்து கொண்டிருக்கும் போதே மிட் நைட் 1.30 மணிக்கு மீனாவிற்கு போன் போட்ட ராஜீயால் செந்திலுக்கு சந்தேகம் வந்தது.

மிட்நைட்டில் மீனாவிற்கு வந்த போன் கால்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சென்னைக்கு டான்ஸ் போட்டிக்கு சென்றிருந்த ராஜீயை நடுவர்களிடமிருந்து பாதுகாப்பாக மீட்ட கதிர், ராஜீயுடன் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் கதிர் மற்றும் ராஜீயின் ரொமான்ஸ் காட்சிகள் இருந்தது. மேலும், தான் எந்தளவிற்கு ராஜீ மீது அன்பும், பாசமும், காதலும் கொண்டிருக்கிறேன் என்பதை கதிர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தினார். அதையெல்லாம் கேட்டு கேட்டு ராஜீ வெட்கத்தில் பூரித்துப் போனார்.
சந்தேகத்தால் தூக்கம் வராமல் தவித்த செந்தில்!
இருவருமே கண்களால் பேசிக் கொண்டனர். இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடு தொடர்ச்சியாக நடு ராத்திரி 1.30 மணிக்கு மீனாவிற்கு போன் போட்டு அக்கா நீங்க நெனச்சது நடந்துருச்சு. கதிர் மனசுல என்ன நினைக்கிறானு சொல்லிட்டான். அவனோட மனசுல நான் தான் இருக்கேனு சொல்லிட்டான். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்று சொல்லி ரொம்பவே வெட்கப்பட்டார். இதைக் கேட்ட மீனாவிற்கு ரொம்ப சந்தோஷம். காரணம் என்னவென்றால், ஆரம்பத்திலிருந்தே மீனா தான் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்கள். கதிரும் உன்னை காதலிக்கிறான், நீயும் கதிரை காதலிக்கிற என்று. ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் நேரடியாக சொல்லிக்கொள்ளவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
நைட் 1.30 மணிக்கு போன் வரவே அது செந்திலுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. செந்தில் யார் யார் என்று கேட்டும், அதற்குரிய பதிலை மீனா அளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த செந்தில் மீனாவின் செல்போனை எடுத்து பார்த்துவிட்டார். இது மீனாவிற்கு தெரியவர கோபமடைந்தார். இதைத் தொடர்ந்து காலையில் ராஜீ மற்றும் கதிர் இருவரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது என்னாச்சு என்னாச்சு என்று எல்லோரும் கேட்கவே, கதிர் நம்மை மீறி சென்றதால் அவரால் போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லை. அதனால் போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார் என்று பொய் சொல்லிவிட்டார்.
செந்தில் மற்றும் மீனா
ராஜீ எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால், மீனா மற்றும் அரசி இருவரும் அவரது ரூமிற்கு சென்ற கேட்ட போது ராஜீ எல்லா உண்மையையும் சொல்லிவிட்டார். அதற்கு அரசி இதை அப்பாவிடம் சொல்லியிருந்தால் குடும்பத்தோடு அங்கு சென்று அந்த இடத்தை உடைத்துவிடலாம் என்றார். ஆனால் மீனா உன்னுடைய விஷயத்தில் என்ன நடந்தது என்று நினைவில் வைத்துக் கொள் அரசி என்று சொல்லவே உடனே ஆமாம் சரி தான் என்று கிளம்பிவிட்டார். இதைத் தொடர்ந்து செந்தில் மீனாவிடம் மன்னிப்பு கேட்க, இருவரும் பைக்கில் ஆபிஸிற்கு சென்றனர்.