Bangladesh Beats Hong Kong in Asia Cup: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. லிட்டன் தாஸ் அதிரடி அரை சதம் விளாசினார். இது ஹாங்காங் அணிக்கு 2வது தோல்வியாகும்.
Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது ஆட்டத்தில் வங்கதேச அணி விக்கெட் 7 வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை விழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. ஹாங்காங் கேப்டன் யாசிம் முர்தாசா 19 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். நிஜகத் கான் 40 பந்தில் 42 எடுத்தார்.
ஹாங்காங் 143 ரன்கள்
வங்கதேசம் தரப்பில் தஷ்கின் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 144 என்ற சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த வங்கதேச அணி 47 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்தது. பர்வேஸ் ஹொசைன் எமோன் 19 ரன்னிலும், டான்சித் ஹசன் 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்பு ஜோடி சேர்ந்த கேப்டன் லிட்டன் தாஸ், டோஹித் ஹிரிதோய் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
லிட்டன் தாஸ் அரை சதம்
அற்புதமாக விளையாடிய லிட்டன் தாஸ் சூப்பர் ஷாட் மூலம் பவுண்டரிகளை ஓட விட்டு அரை சதம் விளாசினார். மறுபக்கம் டோஹித் ஹிரிதோய் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அணி வெற்றியை நெருங்கிய நேரத்தில் சூப்பர் அரை சதம் விளாசிய லிட்டன் தாஸ் 39 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
வங்கதேசம் வெற்றி
வங்கதே அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டோஹித் ஹிரிதோய் 36 பந்தில் 35 ரன் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். அதிரடி அரை சதம் விளாசிய லிட்டன் தாஸ் ஆட்டநாயகன் விருது வென்றார். 2 ஆட்டத்தில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்த ஹாங்காங் தொடரில் இருந்து வெளியேறி விட்டது.
