Asia Cup 2025: Hong Kong vs Bangladesh: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசதுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 143 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் யாசிம் முர்தாசா அதிடியாக விளையாடினார்.

Asia Cup Cricket: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது ஆட்டத்தில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் ஹாங்காங் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.

ஹாங்காங் அணி முதலில் பேட்டிங்

தொடக்கத்தில் தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 30 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்தது. அன்ஷி ராத் (4 ரன்), பாபர் ஹயாத் (14) இருவரையும் தஷ்கின் அகமது வெளியேற்றினார். மறுமுனையில் ஓரளவு சிறப்பாக ஆடிய ஜீஷான் அலி 34 பந்தில் 30 ரன் எடுத்து அவுட் ஆனார். பின்பு ஜோடி சேர்ந்த நிஜகத் கான், கேப்டன் யாசிம் முர்தாசா அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

அதிரடியாக ஆடிய கேப்டன்

இவர்கள் இருவரும் அணியின் ஸ்கோரை 100 ரன்னுக்கு மேல் கொண்டு சென்ற நிலையில் ஹாங்காங் 150 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாசிம் முர்தாசா 19 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இதன்பு நன்றாக விளையாடிய நிஜகத் கானும் (40 பந்தில் 42) அவுட் ஆனதால் ஹாங்காங் ரன் வேகம் தளர்ந்தது.

ஹாங்காங் 20 ஓவரில் 143 ரன்கள்

இறுதியில் கிஞ்சித் ஷா (0), ஐசாஸ் கான் (5) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய ஹாங்காங் அணி 7 விக்கெட் இழந்து 143 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் தரப்பில் தஷ்கின் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 144 என்ற சவாலான இலக்கை நோக்கி வங்கதேசம் பேட்டிங் செய்கிறது. ஹாங்காங் சிறப்பாக பந்துவீசி நெருக்கடி கொடுத்தால் வங்கதேசத்தை வீழ்த்த முடியும்.