- Home
- Sports
- Sports Cricket
- விராட் கோலி-அனுஷ்கா சர்மாவை வெளியேற்றிய நியூசிலாந்து கஃபே! உண்மையில் நடந்தது என்ன?
விராட் கோலி-அனுஷ்கா சர்மாவை வெளியேற்றிய நியூசிலாந்து கஃபே! உண்மையில் நடந்தது என்ன?
Virat Kohli-Anushka Sharma: விராட் கோலியையும், அனுஷ்கா சர்மாவையும் நியூசிலாந்து கஃபே ஒன்று வெளியேற்றியதாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். விராட் கோலி, அனுஷ்கா இருவரும் லண்டனில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஜோடி
விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் லண்டனில் தங்கள் வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்து வருகின்றனர் . இந்த ஜோடி தனிமையை விரும்பினாலும், அடிக்கடி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அவர்கள் சந்தித்து வருகின்றனர். இதேபோல் சக கிரிக்கெட் வீரர்களையும் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில், இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தானும் அணியின் சக வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் நியூசிலாந்து கஃபேவில் விராட் கோலியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
விராட் கோலி-அனுஷ்கா சர்மாவை சந்தித்த ஜெமிமா
ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கியிருந்த ஹோட்டல் கஃபே ஒன்றில் இந்த சந்திப்பு நடந்தது. இது குறித்து பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், ''அந்த கஃபேவில் அனுஷ்கா சர்மாவும் அங்கு இருந்ததால், சந்திப்பு இன்னும் மறக்கமுடியாததாக மாறியது. “நீங்கள் இருவரும் மகளிர் கிரிக்கெட்டை மாற்றும் சக்தி படைத்தவர்கள், அது நடப்பதை என்னால் பார்க்க முடிகிறது” என்று விராட் தன்னையும் ஸ்மிருதியையும் ஊக்குவித்ததை ஜெமிமா நினைவு கூர்ந்தார்.
விராட் கோலி-அனுஷ்கா சர்மாவை வெளியேற்றிய கஃபே
இந்த சந்திப்பின்போது கிரிக்கெட்டில் தொடங்கி வாழ்க்கை, குடும்பம் ஆகியவை குறித்து பேசியதாகவும், நான்கு மணி நேர அரட்டை பழைய நண்பர்களின் மறு சந்திப்பு போல் இருந்ததாகவும் ஜெமிமா விவரித்தார். தொடர்ந்து “கஃபே ஊழியர்கள் எங்களை வெளியேறச் சொன்னதால் மட்டுமே நாங்கள் நிறுத்தினோம்” என்று அவர் புன்னகையுடன் கூறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், Mashable India உடனான நேர்காணலின் போது இந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.
தனிமையை விரும்பும் ஜோடி
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா 2013 ஆம் ஆண்டு ஒரு விளம்பரப் படப்பிடிப்பில் சந்தித்த பிறகு டேட்டிங் செய்யத் தொடங்கினர். டிசம்பர் 2017ல் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மிகவும் தனிமையை விரும்பி வரும் இந்த நட்சத்திர ஜோடி பொதுவெளியில் தங்கள் குழந்தைகளை புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற கடுமையான கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.