21ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி லெவனை விஸ்டன் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து இரண்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி இடம் பெறவில்லை.

Wisden's World Test XI: கிரிக்கெட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன், 21ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி வெவனை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து இரண்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இடம் பெறவில்லை. இதேபோல் மகேந்திர சிங் தோனியும் இல்லை. ஆஸ்திரேலியாவில் இருந்து ஐந்து வீரர்களும், தென்னாப்பிரிக்காவில் இருந்து நான்கு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

விஸ்டன் உலக டெஸ்ட் லெவன்

இங்கிலாந்தில் இருந்து ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை என்பதும் ஆச்சரியத்தை அளிக்கிறது. ஜோ ரூட் இடம் பெறாதது இங்கிலாந்து ரசிகர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 2000 ஜனவரி 1 முதல் வீரர்களின் செயல்பாடுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த டெஸ்ட் லெவன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விஸ்டன்.காம் இன் மேலாண்மை ஆசிரியர் பென் கார்ட்னர், விஸ்டன் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் பில் வாக்கர், போட்காஸ்ட் தொகுப்பாளர் யாஷ் ராணா ஆகியோர் இணைந்து இந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளனர்.

சேவாக், பாண்டிங்குக்கு இடம்

இந்த டெஸ்ட் லெவனில் தொடக்க ஆட்டக்காரராக வீரேந்தர் சேவாக் இடம் பெற்றுள்ளார். அலிஸ்டர் குக், மேத்யூ ஹெய்டன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி சேவாக் இடம் பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் இடம் பெற்றுள்ளார். நான்காவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் இடம் பெற்றுள்ளார். சச்சின், விராட் கோலி, ஜோ ரூட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி காலிஸ் இடம் பிடித்துள்ளார்.

பும்ரா, வார்னே

ஐந்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் இடம் பெற்றுள்ளார். விக்கெட் கீப்பராக ஆடம் கில்கிறிஸ்ட் இடம் பெற்றுள்ளார். ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக ஷேன் வார்ன் இடம் பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக டேல் ஸ்டெய்ன், பேட் கம்மின்ஸ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

விஸ்டன் தேர்வு செய்த 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவன்: வீரேந்தர் சேவாக், கிரேம் ஸ்மித், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், ஏபி டிவில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன், பேட் கம்மின்ஸ், டேல் ஸ்டெய்ன், ஜஸ்பிரித் பும்ரா.

Scroll to load tweet…