உண்மையை மறைத்து ராஜீயை காப்பாற்றி ஹீரோவான கதிர் – வீட்டில் என்ன நடந்தது?
Kathir Saves Raji at His House : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் வீட்டிற்கு வந்த கதிர் மற்றும் ராஜீயிடம் என்ன நடந்தது என்பது பற்றி எல்லோருமே கேள்வி எழுப்பினர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 583ஆவது எபிசோடில் ராஜீ மற்றும் கதிர் இருவரும் வீட்டிற்கு வந்தனர். வாசலில் தங்கமயில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் ராஜீயிடம் கேள்வி கேட்க, கதிர் வீட்டில் எல்லோருமே இதைத்தான் கேட்பார்கள். அதனால், எல்லோருக்கும் ஒட்டு மொத்தமாக நான் பதில் அளிக்கிறேன்.
வீட்டிற்குள் வாங்க என்று சொல்லிவிட்டு அனைவரும் வீட்டிற்குள் சென்றனர். அவர்களிடம் ஒருவர் மாற்றி ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜீ நான் போட்டியில் பங்கேற்கவில்லை. பாதியிலேயே வந்துவிட்டேன் என்றார். பதிலுக்கு கதிர் நாம் சொன்னது எல்லாமே அவளுக்கு புரிந்துவிட்டது. அதனால், போட்டியில் பங்கேற்கவில்லை. வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டாள் என்றார்.
இதையடுத்து ராஜீ எனக்கு டயர்டாக இருக்கிறது என்று கூறிவிட்டு ரூமிற்கு சென்றார். அப்போது அவரிடம் மீனா மற்றும் அரசி இருவரும் என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பினர் அதற்கு ராஜீ உண்மையில் சென்னையில் என்ன நடந்தது என்று எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்துவிட்டார்.
அதற்கு மீனாவோ கெட்டதிலேயும் ஒரு நல்லது நடந்திருக்கிறது என்றார். கதிர் உன்னை அந்தளவிற்கு காதலிக்கிறான். அப்படி இப்படி என்று புகழ்ந்து பேசினார். ஆனால், அதற்கு முன்னதாக ரூமிற்கு வந்த ராஜீயிடம் ஒரு பேப்பரில் வந்த விளம்பரத்தை கூட உன்னால் உண்மையா இல்லையா என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லையே, அப்படியிருக்கும் போது நீயெல்லாம் எப்படி போலீசாக மாறி உண்மையை எப்படி கண்டுபிடிப்பாய் என்று கேள்விகள் எழுப்பினர்.