- Home
- Lifestyle
- Snake Prevention Tips : உங்க வீட்டுல இந்த பொருள்கள் இருக்கா? சீக்கிரமே பாம்புகள் வந்துடும்! ஜாக்கிரதை!
Snake Prevention Tips : உங்க வீட்டுல இந்த பொருள்கள் இருக்கா? சீக்கிரமே பாம்புகள் வந்துடும்! ஜாக்கிரதை!
பாம்புகளை வீட்டிற்குள் ஈர்க்கும் 5 வகையான விஷயங்களை இங்கு காணலாம்.

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். பலருக்கும் பாம்பு என்றால் பயம்தான். அதனால்தான் பாம்புகள் வீட்டிற்கு வராமல் தடுக்க பல விஷயங்களை செய்கின்றனர். ஆனாலும் சில நேரங்களில் பாம்புகள் வீட்டிற்குள் வந்து விடுகின்றன. இதற்கு பாம்புகளை ஈர்க்கும் சில பொருள்களை வீட்டில் வைத்திருப்பதுதான் காரணமாகும். அவை என்னென்ன பொருட்கள் என இங்கு காணலாம். இந்த பொருட்களை வீட்டிலிருந்து விலக்கி வைத்தால் பாம்புகள் வீட்டுக்கு வருவதை தடுக்க முடியும்.
உங்க வீட்டை சுற்றி மணம் வீசும் செடிகள் வைக்க வேண்டாம். வீட்டிற்கு முன் அல்லது வீட்டை சுற்றி நல்ல மணம் வீசும் பூச்செடிகள் வைத்தால் பாம்புகள் வீட்டிற்கு அடிக்கடி வர வாய்ப்புள்ளது. அதிலும் மல்லிகைச்செடி வைக்கவே வேண்டாம். அவை பாம்புகளை ஈர்க்கும். குங்குமப்பூ, சாமந்தி பூ வகை செடியான கெமோமில் போன்றவை பாம்புகளை ஈர்க்கின்றன.
சிலர் தங்கள் தோட்டங்களில் உரம் போடுவதற்காக இலைகளைக் குவித்து வைப்பார்கள். இங்கு பாம்புகள் காணப்படுகின்றன. அழுகிப் போகும் குப்பைகளுக்கு அருகே எலிகள், பூச்சிகள். வருவது இயல்பு. அவற்றை உண்ண பாம்புகளும் வரக் கூடும். எனவே வீட்டைச் சுற்றி குப்பைகளைக் குவித்து வைக்காதீர்கள்.
சிலர் வீட்டை அழகுப்படுத்த வீட்டில் சின்ன தண்ணீர் தொட்டி அமைத்து அதில் தாமரை போன்ற தாவரங்களை வளர்க்கிறார்கள். இப்படி சிறிய தொட்டிகள் அமைத்தாலும் அதில் தவளைகள் குடியேறும். பாம்புகள் இவற்றை உண்ணும். அதனாலயே வருகின்றன. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கினால், சின்ன தொட்டிகள் அமைத்தால் கவனமாக இருங்கள். வெயில் நேரங்களில் குளிர்ச்சிக்காவும் பாம்புகள் இது மாதிரியான ஈரப்பதம் உள்ள இடங்களை தேடி வரும்.
வீட்டை அழகுப்படுத்துவதாக நினைத்து கொடி போன்ற செடிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது. தரையில் அடர்த்தியாக வளரக்கூடிய புல்வெளிகளை வைக்க வேண்டாம். இவை பாம்புகளை ஈர்க்கக் கூடியவை. பாம்புகளுக்கு குளிர்ச்சியான சூழலை வழங்குவதால் அவை இங்கு வந்து தங்குகின்றன.
வீட்டில் அடர்ந்த மரங்கள், புதர்கள் போன்றவை வளர்க்க வேண்டாம். இவை விலங்குகள், பறவைகள், பூச்சிகளை ஈர்க்கக் கூடியவை. அவை வந்து தங்குவதால் பாம்புகளுன் அவற்றை உண்ண அங்கு வரும். வீட்டை சுற்றி புதர் போன்ற செடிகளை வளர்க்கவே கூடாது.