இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், இபிஎஸ், முதல்வர் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:27 PM (IST) Aug 02
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
10:04 PM (IST) Aug 02
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது, இதில் ரஜினிகாந்த் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.
09:53 PM (IST) Aug 02
உடல் உறுப்புகளை தானம் செய்யும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்திருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
09:31 PM (IST) Aug 02
பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்திக்க ஆர்வப்பட்ட நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதனை விரும்பவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
08:51 PM (IST) Aug 02
நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
08:32 PM (IST) Aug 02
நகைச்சுவை நடிகர், இசை அமைப்பாளர், தொலைக்காட்சி நடுவர் என பன்முக திறமை கொண்ட நடிகர் மதன் பாப் காலமானார்.
07:29 PM (IST) Aug 02
டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
07:15 PM (IST) Aug 02
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கூலி திரைப்படத்தின் டிரெயிலர் ரிலீஸ் ஆகி உள்ளது.
06:05 PM (IST) Aug 02
பெங்களூருவில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் முன்னாள் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
05:43 PM (IST) Aug 02
தினமும் டியோடரண்ட் பயன்படுத்துவதால் சில உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
04:48 PM (IST) Aug 02
பீகார் மாநிலத்தில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டள்ள நிலையில், இந்த பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டி உள்ளார்.
03:53 PM (IST) Aug 02
இந்தியாவில் கள்ளக்காதல் அதிகமாக உள்ள நகரங்களில் சிலவற்றை இங்கு காணலாம்.
03:46 PM (IST) Aug 02
03:40 PM (IST) Aug 02
ஹெல்மெட்டை ஏன் சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
03:26 PM (IST) Aug 02
உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் இருக்கிறார் என்றால் அது அன்புமணியாக மட்டுமே இருக்க முடியும் என்று கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பை கிளப்பி உள்ளார்.
03:00 PM (IST) Aug 02
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர்கள் பலர் காணாமல் போய் உள்ளார்கள்.
02:09 PM (IST) Aug 02
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தர்ஷன் நடித்துள்ள ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே வசூலில் கடும் சரிவை சந்தித்து உள்ளது.
02:00 PM (IST) Aug 02
கவினின் தந்தை சந்திரசேகர் மற்றும் ஆறுமுகமங்கலம் சுற்றுவட்டார தேவேந்திரகுல வேளாளர்கள் ஐந்து நாட்கள் நடத்திய வீரமிகு போராட்டம் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
01:30 PM (IST) Aug 02
வைகோவுக்கும் மல்லை சத்யாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மல்லை சத்யா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார், வைகோவின் ஜனநாயகப் போக்கு குறித்து விமர்சனங்களை முன்வைக்கிறார்.
01:00 PM (IST) Aug 02
பெண்களின் ஆரோக்கியத்திற்கு வெள்ளரி விதை செய்யும் அற்புத நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
12:58 PM (IST) Aug 02
தமிழக அரசு, பௌத்தர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி வழங்குகிறது. ஒருவருக்கு ரூ.5,000 வரை மானியம் வழங்கப்படும். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று, நவம்பர் 30, 2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
12:57 PM (IST) Aug 02
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கடந்த மாதம் ஆதிரை விலகிய நிலையில், இந்த மாதம் மற்றுமொரு நடிகை அந்த சீரியலை விட்டு விலகி உள்ளார்.
12:19 PM (IST) Aug 02
சென்னையை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தில் ஓட்டுநர் ஒருவர் 9 வயது சிறுமியை ஆபாசமாக படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக பயணிகள் ஓட்டுநரை தாக்கி, பின்னர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் போலீசில் புகார் அளித்தனர்.
12:08 PM (IST) Aug 02
12:08 PM (IST) Aug 02
தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழாவில், திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் எம்எல்ஏ மகாராஜன் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதலால் நிகழ்ச்சி பரபரப்பாக முடிவுக்கு வந்தது.
12:01 PM (IST) Aug 02
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
11:51 AM (IST) Aug 02
செப்டம்பரில் அறிமுகமாகும் ஆப்பிளின் ஐபோன் 17 தொடரில் ஐபோன் 17, புதிய ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ மற்றும் ஐபோன் 17 புரோ மேக்ஸ் ஆகியவை அடங்கும்.
11:42 AM (IST) Aug 02
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முழுமையான தன்னிறைவை அடைவதன் மூலம் டிஜிட்டல் இறையாண்மையை அடைவதை இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
11:19 AM (IST) Aug 02
மீண்டும் அதிமுகவில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்தும், பாஜகவின் ஆதரவும் கிடைக்காததால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதிமுக இதனை விமர்சித்துள்ளது.
11:15 AM (IST) Aug 02
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன் அவர் நடித்து ஏ சான்றிதழ் பெற்ற படங்களை பார்க்கலாம்.
11:15 AM (IST) Aug 02
ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்தெந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவிக்கு ரொம்பவே உண்மையாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.
11:10 AM (IST) Aug 02
11:07 AM (IST) Aug 02
முன்னாள் எம்.பி. கே.பி.பழனிசாமி, எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுகவின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியின் வளர்ச்சிக்காக கூட்டணி அவசியம் என்றும், ஓ.பி.எஸ், தினகரன், தேமுதிக போன்றவர்களுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும்.
10:27 AM (IST) Aug 02
10:20 AM (IST) Aug 02
அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் ரஷ்ய எண்ணெயின் தள்ளுபடி குறைவு போன்ற காரணங்களால், இந்திய அரசு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தியுள்ளன. இந்தியா தனது எரிசக்தி மூலோபாயத்தை மாற்றியமைத்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
10:05 AM (IST) Aug 02
சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியலில் பஞ்சாயத்தில் ஆனந்தி விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:04 AM (IST) Aug 02
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு அரசின் ஒழுக்கக் கேடான, தகுதியற்ற நியமனங்களே காரணம் என்றும் பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.
09:49 AM (IST) Aug 02
கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.9,290 ஆகவும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.74,320 ஆகவும் உள்ளது.
09:37 AM (IST) Aug 02
மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் சோட்டானிக்கரையில் உள்ள ஹோட்டல் அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
09:18 AM (IST) Aug 02