ஹெல்மெட்டை ஏன் சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
நாம் தினசரி பயன்படுத்தும் ஹெல்மெட் சுத்தமாக வைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம். ஹெல்மெட்டை சுத்தம் செய்வதற்கு சிரமமாக இருந்தாலும் நம் தினசரி பயன்படுத்தக்கூடியது என்பதால் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். இல்லையெனில், அதில் நம் தலையில் இருக்கும் எண்ணெய் பசை, அழுக்கு, பூஞ்சை போன்றவை தொற்று நோய்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளன. இதன் விளைவாக தலையில் பொடுகு பிரச்சனை ஏற்படும். மேலும் ஹெல்மெட் கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொண்டால் தெளிவான பார்வை கிடைக்க உதவும். சரி இப்போது ஹெல்மெட்டை சுத்தம் செய்யும் முறை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஹெல்மெட்டை சுத்தம் செய்வதற்கான வழிகள்:
1. தற்போது கடைகளில் விற்பனையாகும் ஹெல்மெட்களில் பாகங்களை தனியாக பிரித்து எடுக்கக்கூடிய வசதி இருப்பதால் நீங்கள் அவற்றை பிரித்து சுத்தம் செய்வதன் மூலம் பூஞ்சைகளை அவற்றிலிருந்து முழுமையாக அகற்றி விடலாம்.
2. ஹெல்மெட்டை சுத்தம் செய்வதற்கு முதலில் சோப்பு மற்றும் ஷாம்பு இரண்டையும் தண்ணீரில் கலந்து ஹெல்மெட்டின் வெளிப்புறத்தில் தெளித்து ஒரு சுத்தமான துணி கொண்டு துடைக்க வேண்டும். வெளிப்புறத்தையும் நன்றாக சுத்தம் செய்யுங்கள். ஆனால் சுத்தம் செய்யும் போது பிரஷ் பயன்படுத்த வேண்டாம். இல்லையெனில் ஹெல்மெட்டில் கீறல்கள் விழுந்து விடும்.
3. அதுபோல ஹெல்மெட்டின் வைசர் பகுதி ரொம்பவே அழுக்காக இருந்தால் அதை தனியே கழற்றி ஊற வைத்து நன்கு தேய்த்து சுத்தம் செய்தால் அதில் இருக்கும் அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும். இதை சுத்தம் செய்வதற்கு பட்ஸ் கூட பயன்படுத்தலாம். ஆனால் இந்த பகுதி கீரை விழாதபடி ரொம்பவே கவனமாக சுத்தம் செய்யுங்கள்.
4. மேலும் ஹெல்மெட்டின் லைனர் பகுதியை சுத்தம் செய்வது ரொம்பவே முக்கியம். ஏனெனில் இதில் தான் நம் தலையில் இருக்கும் எண்ணெய் பசை, அழுக்கு, தூசி படியும். எனவே இந்த பகுதியை தனியாக எடுத்து சோப்பு நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பிறகு நன்கு காய வைத்து பயன்படுத்த வேண்டும். ஆனால் இதை காய வைக்க ஒருபோதும் டிரையர் பயன்படுத்த வேண்டாம்.
ஹெல்மெட்டின் அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்த பிறகு அவற்றை காய வைக்க மறக்காதீர்கள். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்து வந்தால் ஹெல்மெட்டில் அழுக்குகள் தங்காது.
ஹெல்மெட்டையின் சுத்தம் செய்யணும்?
நம் தினசரி பயன்படுத்தும் எந்த ஒரு பொருளையும் சுத்தமாக வைப்பது போலவே ஹெல்மெட்டையும் சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம். ஏனெனில் ஹெல்மெட்டில் படிந்திருக்கும் அழுக்குகள், தூசிகள் உச்சந்தலையில் அரிப்பு போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால் முடியின் அரவிந்தன் பாதிக்கப்படும். எனவே வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக ஹெல்மெட்டை சுத்தம் செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
