தினமும் டியோடரண்ட் பயன்படுத்துவதால் சில உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
வியர்வை என்பது மனிதர்களுக்கு வரும் ஒரு சாதாரண விஷயம். ஆனால் வியர்வை நாற்றம் நம் அருகில் இருப்பவரின் முகத்தை சுளிக்க வைக்கும். எனவே வியர்வை நாற்றத்தை தவிர்க்க தற்போது பலரும் டியோடரண்ட் (Deodorant) என்னும் வாசனை திரவத்தை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
தங்கள் மீது துர்நாற்றம் வீசாமல் வாசனை வீச வேண்டுமென்று அனைத்து வயதினரும் இதை பயன்படுத்துகிறார்கள். டியோடரண்ட் பயன்படுத்துவது வாசனையாக இருந்தாலும் அது ஒருசில தீமைகளை உடலுக்கு விளைவிக்கும் தெரியுமா? இந்த பதிவில் டியோடரண்ட் தினமும் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்பட்டுள்ளன. எனவே, நீங்கள் படித்து டியோடரண்ட்டை ஒரேடியாக நிறுத்த விரும்பாவிட்டால் அதிகமாக பயன்படுத்துவதையாவது தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
தினமும் டியோடரண்ட் பயன்படுத்துவதன் தீமைகள்:
1. சரும பிரச்சினை
டியோடரண்டில் இருக்கும் இரசாயனங்கள் சிலருக்கு சருமத்தில் வறட்சி மற்றும் அலர்ஜியை ஏற்படுத்திவிடும். இதனால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல், சிவத்தல் போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
2. ஞாபக மறதி
ஆய்வுகள் படி, டியோடரண்ட்டில் இருக்கும் அலுமினிய உப்புக்கள் ஞாபக மறதியை ஏற்படுத்துவதில்லை என்று சொல்லப்படுகின்றது. நீங்கள் அதை பயன்படுத்தும் போது நியாபக மறதி வருகிறது என்றால் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்ப்பது தான் உங்களுக்கு நல்லது.
3. பிறப்பு குறைபாடுகள்
சிறு குழந்தைகள் டியோடரண்ட் அதிகமாக பயன்படுத்தினால் அவர்கள், சின்ன வயதிலேயே பருவமடைய வாய்ப்பு உள்ளன. மேலும் கர்ப்பிணிகள் எக்காரணம் கொண்டு இதை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அது வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிறப்பு குறைபாட்டை ஏற்படுத்திவிடும்.
4. மார்பக புற்றுநோய்:
டியோடரண்ட் அக்குளில் அடிப்பதால், அதில் இருக்கும் ஈஸ்ட்ரோஜெனிக் என்னும் கெமிக்கலானது மார்பில் இருக்கும் திசுக்களை பாதிக்கும். அதாவது அது மார்பக திசுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். இந்த திசுக்களின் அளவு அதிகமானால் அது மார்பக புற்றுநோயை உண்டாகும்.
5. சுவாச பிரச்சனைகள்
டியோடரண்டில் இருந்து வரும் வாசனை திரவியங்கள் சுவாச பாதையில் சென்று எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் இருமல், மூச்சுத்திறல் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
6. விறைப்பு குறைபாடு
சில ஆய்வுகள் படி, டியோடரண்டில் இருக்கும் இரசாயனங்கள் ஆண்களுக்கு விறைப்பு குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
குறிப்பு :
நீங்கள் டியோடரண்ட் பயன்படுத்திய பிறகு சருமத்தில் ஏதேனும் எரிச்சல் அல்லது பிற பிரச்சனைகளை கண்டால் உடனே மருத்துவரிடம் அணுகுவது தான் நல்லது.
