- Home
- Lifestyle
- Perfume: டியோடரண்ட், ரோல் ஆன், பாடி ஸ்பிரே, பெர்ஃப்யூம் வித்தியாசம் என்ன? யார் எதை பயன்படுத்த வேண்டும்?
Perfume: டியோடரண்ட், ரோல் ஆன், பாடி ஸ்பிரே, பெர்ஃப்யூம் வித்தியாசம் என்ன? யார் எதை பயன்படுத்த வேண்டும்?
டியோடரண்ட், ரோல் ஆன், பாடி ஸ்பிரே, பெர்ஃப்யூம் ஆகிய அனைத்தும் உடலுக்கு நறுமணத்தை தரக்கூடிய பொருட்களாகும். ஆனால் ஒவ்வொன்றுக்கும் அதன் நோக்கம், செயல்படும் விதம், பயன்படுத்தும் முறை ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வாசனை திரவியங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம்
இந்தியா போன்ற அதிக வெப்பமான நாடுகளில் வியர்வை என்பது சகஜமான ஒன்று. வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கு பலரும் பெர்ஃப்யூம் பயன்படுத்துகின்றனர். ஆனால் சந்தைகளில் ரோல் ஆன், பாடி ஸ்பிரே, பெர்ஃப்யூம், Parfum போன்ற பல வகைகளில் வாசனை திரவியங்கள் விற்பனையாகின்றன. இந்த வாசனை திரவியங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன? அதை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
டியோடரண்ட் (Deodorant)
டியோடரண்ட் என்பது வியர்வையினால் ஏற்படும் உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவது இதன் முக்கிய வேலையாகும். வியர்வை இயற்கையில் மணமற்றது. ஆனால் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் வியர்வையுடன் கலந்து செயல்படும்பொழுது துர்நாற்றம் ஏற்படுகிறது. டியோடரண்டில் நுண்ணுயிர் எதிர்ப்புக் கூறுகள், அதாவது ஆன்ட்டி மைக்ரோபியல் ஏஜென்ட்கள் நிறைந்துள்ளது. இது துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும். சில டியோடரண்டுகளில் வியர்வையைக் குறைக்கும் ஆன்ட்டிபெர்ஸ்பிரன்ட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். பொதுவாக டியோடரண்ட் வியர்வை அதிகம் சுரக்கும் அக்குள் போன்ற பகுதிகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் நறுமணம் இருக்கும் ஆனால் அது லேசானதாக இருக்கும். இதன் முதன்மை நோக்கம் நறுமணம் கொடுப்பதல்ல. துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவது.
ரோல் ஆன் (Roll-on)
ரோல் ஆன் என்பது ஒருவகை டியோடரண்டாகும். இதுவும் உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. திரவ வடிவில் இருக்கும் பாட்டிலின் நுனியில் உள்ள உருளை மூலமாக நேரடியாக அக்குள் பகுதிகளில் தேய்த்து பயன்படுத்தலாம். இந்த திரவம் பாக்டீரியாக்களை அழித்து துர்நாற்றத்தை தடுக்க உதவும். இது சருமத்தில் ஈரப்பதத்தை உருவாக்குவதால் உலர்வதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். இந்த ரோல் ஆனை அக்குள் பகுதிகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். டியோடரண்ட் போலவே எதிலும் லேசான நறுமணம் மட்டுமே இருக்கும். டியோடரண்ட் மற்றும் ரோல் ஆன் இரண்டுமே வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை உடலுக்கு தனித்துவமான வாசனையை தருவதில்லை.
பாடி ஸ்பிரே (Body Spray)
பாடி ஸ்பிரே என்பவை லேசான புத்துணர்ச்சி தரும் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது இது உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தாது பாடி ஸ்ப்ரேவில் வாசனை திரவத்தின் சரிவு மிகவும் குறைவாக இருக்கும் இது உடலின் மீது உர லேசான நறுமணத்தை பறக்கும் இந்த நறுமணம் சில மணி நேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் பாடி ஸ்பிரே பை உடலின் எந்த ஒரு பகுதிகளும் பயன்படுத்தலாம் முழு உடலிலும் ஒரு புத்துணர்ச்சியான வாசனையை பெற விரும்புபவர்கள் உடல் முழுவதும் இதை அடித்துக் கொள்ளலாம் இது வாசனைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நறுமணம் சற்று அதிகமாகவும் அதே சமயம் பெர்பாமை விட சற்று குறைவாகவும் இருக்கும் பெர்ஃப்யூம் ஐ ஒப்பிடும்போது விலையும் சற்று குறைவாக இருப்பதால் பலரும் பாடி ஸ்பிரேவை விரும்புகின்றனர். ஆனால் இது நீண்ட நேர நறுமணத்திற்கு உதவாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பெர்ஃப்யூம் (Perfume)
உடலுக்கு ஒரு ஆழமான நீடிக்கக்கூடிய நறுமணத்தை கொடுப்பதே பெர்ஃப்யூமின் நோக்கமாகும். பெர்ஃப்யூமில் வாசனை எண்ணெய்களின் செறிவு மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் தான் இதன் நறுமணம் பல மணி நேரம் அல்லது ஒரு நாள் வரை கூட நீடிக்கும். உடலில் பல்ஸ் பாயிண்ட் எனப்படும் நாடி துடிப்புகள் இருக்கும் இடங்களான கழுத்து, காதின் பின்புறம், மணிக்கட்டு ஆகிய இடங்களில் இதை பயன்படுத்துவது சிறந்தது. இதை துணி மீதும் பயன்படுத்தலாம். பெர்ஃப்யூம்களில் நறுமணம் பல அடுக்குகளாக இருக்கும். நறுமணத்தின் செறிவைப் பொறுத்து இது EDT, EDP, Parfum என்று பல வகைகளாக பிரிக்கப்படுகிறது. EDT என்பது 5 முதல் 15% வாசனை எண்ணெய் செறிவைக் கொண்டுள்ளது. இது 3-5 மணி நேரம் இருக்கும். EDP என்பது 20% வரை வாசன எண்ணெய் செறிவைக் கொண்டுள்ளது. இது 5-8 மணி நேரம் நீடிக்கும். Parfum 30% வரை வாசனை எண்ணெய் செறிவைக் கொண்டிருப்பதால் 8 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும்.
யார் எதை பயன்படுத்தலாம்?
பெர்ஃப்யூமை சரியான முறையில் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் அது உங்கள் ஆளுமைக்கு தனித்துவமான அம்சத்தை கொடுக்கும். வாசனை திரவியங்களால் ஒவ்வாமை இருப்பவர்கள், தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் இவற்றை தவிர்த்து விடுவது நல்லது. வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் டியோடரண்ட், ரோல் ஆன் பயன்படுத்தலாம். உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க விரும்புவார்கள் பாடி ஸ்பிரேவை பயன்படுத்தலாம். உங்களுக்கென தனி நறுமணத்தை உருவாக்க வேண்டும் அல்லது நீங்கள் அலுவலகம், பொது நிகழ்ச்சிகள், பொது இடங்களுக்குச் செல்லும் பொழுது உங்களை சிலர் திரும்பி பார்க்க வேண்டும் என்றால் அதிக வாசனை திரவியங்களின் செறிவு கொண்ட EDP அல்லது parfum போன்ற பெர்ஃப்யூம் வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.