- Home
- Astrology
- Birth Month : பெண்களே! இந்த 3 மாசத்துல பிறந்த ஆண்கள கல்யாணம் பண்ணுங்க!! ரொம்ப உண்மையா இருப்பாங்க
Birth Month : பெண்களே! இந்த 3 மாசத்துல பிறந்த ஆண்கள கல்யாணம் பண்ணுங்க!! ரொம்ப உண்மையா இருப்பாங்க
ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்தெந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவிக்கு ரொம்பவே உண்மையாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.

Best Month To Marry A Loyal Man
ஒரு உறவில் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மை இருந்தால் மட்டுமே அந்த உறவு நீண்ட காலம் நிலைத்திருக்கும். தற்போது பலரது உறவு தோல்வியடைவதற்கு முக்கிய காரணம் உறவில் உண்மையில்லாமை தான். இந்த குணம் அனைவரிடமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்த காலத்திலோ வெகுசிலரிடம் மட்டுமே உள்ளன.
அந்த வகையில் ஒவ்வொரு பெண்ணும் தனக்கு வரும் கணவர் தன்னிடம் எப்போதுமே உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறாள். ஆனால், பல ஆண்கள் அப்படி இருப்பதில்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த குணம் சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்களிடம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளன. அத்தகைய மதங்களில் பிறந்த ஆண்கள் தங்களது மனைவிக்கு ரொம்பவே உண்மையாக இருப்பார்களாம். இதனால் அவர்களது திருமண வாழ்க்கை நீடித்த நாள் நிலைத்திருக்கும் மற்றும் வெற்றிகரமாகவும் இருக்கும். மேலும் இத்தகைய ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அது எந்தெந்த மாதங்கள் என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மே
மே மாதத்தில் பிறந்தவர்கள் ஒரு உறவில் இணைந்து விட்டால் அதில் வாழ்நாள் முழுவதும் உண்மையாக இருப்பார்கள். பிறரது உணர்வுகளுக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள். அதிலும் குறிப்பாக தங்கள் துணையின் உணர்வுகள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். உறவில் எப்போதுமே விசுவாசமாகவும், நிலையாகவும் இருப்பார்கள். அன்புக்குரியவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். அந்த அளவிற்கு தங்கள் மனைவி மீது அதிக காதல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஜீன்
ஜூன் மாதத்தில் பிறந்தவர்களுக்கு ரொம்பவே பெரிய மனசு தான். ஏனெனில் இவர்கள் தங்கள் மனைவி மீது வைத்திருக்கும் அன்பின் நிமித்தமாக இவர்கள் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உண்மையாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணத்தால் தங்கள் மனைவியும் கனவில் கூட தங்களது கணவருக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். இவர்கள் உண்மையான கணவர் மட்டுமல்ல, தங்கள் மனைவியை பாதுகாக்கும் நல்ல பாதுகாவலனாகவும் இருப்பார்கள். மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் துணிய மாட்டார்கள். மனைவியை எப்போதுமே அன்பாக உணர வைக்க விரும்புவார்கள்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்த ஆண்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் ரொம்பவே உண்மையாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் மனைவி மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்பு காரணமாக அவர்கள் உறவு நீண்ட நாள் நீடிக்கும். இவர்களின் இந்த குணத்தால் மனைவியும் அவர்களிடம் நேர்மையாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் மனைவியிடம் உணர்ச்சி ரீதியாக இணைந்திருக்க விரும்புவார்கள். இதனால் தங்களது மனைவிக்கு ஒருபோதும் துரோகம் செய்ய விரும்ப மாட்டார்கள். அது குறித்து சிந்திக்க கூட மாட்டார்கள். திருமண வாழ்க்கை வலுவாக இருக்க விரும்புவார்கள். அதற்காக பல முயற்சிகளையும் செய்வார்கள்.