Birth Date : உங்க பிறந்த தேதி இதுவா? அப்ப ஆகஸ்ட் மாதம் இந்த பலன்கள் உண்டு
எண் கணிதத்தின்படி, ஒருவரது பிறந்த தேதியை வைத்து ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Numerology Predictions for August 2025
எண் கணிதம் என்பது ஜோதிடத்தின் ஒரு கிளையாகும். எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம், ஆளுமை, போன்ற பல விஷயங்களை கணித்து விட முடியும். அந்த வகையில், ஒருவரது பிறந்த தேதியை வைத்து ஆகஸ்ட் மாதம் 2025 அவர்களுக்கு எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
எண் 1
எண் கணிதத்தின் படி, 1, 10, 19 மற்றும் 28 ஆகிய நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் எண் 1ன் கீழ் வருவார்கள். இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் புதிய வேலை, தொழில் யோசனை, சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமாக திருமணமாகாதவர்களுக்கு இந்த மாதத்தில் திருமணம் நடக்கும். இவர்கள் மாத முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் சூரிய பகவானுக்கு பால் மற்றும் சர்க்கரையை படைத்து வழிபட்டால் அதிர்ஷ்டம் கைகூடும்.
எண் 2
எண் கணிதத்தின் படி, 2, 11, 20 மற்றும் 29 ஆகிய நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் எண் 2ன் கீழ் வருவார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் பொறுமையாக இருந்தால் இம்மாதம் திருமணம் கைகூடும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முழுவதும் அமைதி மற்றும் சமநிலை நிறைந்திருக்கும். இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் கிடைக்க ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அரச மரத்திற்கு நீர் ஊற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
எண் 3
எண் கணிதத்தின் படி, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் எண் 3ன் கீழ் வருவார்கள். இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் பணம் கிடைக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு அமையும். இவர்கள் ஆகஸ்ட் மாதம் அதிஷ்டம் கிடைக்க ஏழை எளியோருக்கு மஞ்சள் நிறத்தில் உணவுகளை மற்றும் இனிப்புகளை தானமாக வழங்க வேண்டும்.
எண் 4
எண் கணிதத்தின் படி, 4, 13, 22 மற்றும் 31 ஆகிய நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் எண் 4ன் கீழ் வருவார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இந்த தேதியில் பிறந்தவர்கள் முதல் வாரம் மந்தமாகவும் சோர்வாகவும் உணர்வீர்கள். மேலும் கடின உழைப்பின் காரணமாக நல்ல பலன்கள் காண்பீர்கள். திருமண வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்கும் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் சில சமயம் ஏற்றத்தாழ்வுகள் நடக்கும். இருப்பினும் நல்ல முடிவுகள் தான் கிடைக்கும். உங்களுக்கு ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் கிடைக்க சிவலிங்கத்திற்கு தண்ணீர் மற்றும் சர்க்கரை படைத்து வழிப்பாடு செய்யுங்கள்.
எண் 5
எண் கணிதத்தின் படி, 5, 14, மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 5ன் கீழ் வருவார்கள். இன்று தேதிகளில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பரபரப்பாக மற்றும் பிஸியாக இருப்பார்கள். பணம் நிறைய சம்பாதிப்பார்கள் கூடவே செலவுகளும் வரும். இமாதத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக மற்றும் இனிமையாக இருக்கும் திருமணமாகாதவர்கள் விரைவில் திருமண வாழ்க்கையில் இணைவார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் அதிஷ்டம் கிடைக்க திருமணமாகாத பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு பச்சை நிறத்தில் ஆடைகளை தானமாக கொடுக்க வேண்டும்.
எண் 6
எண் கணிதத்தின் படி, 6, 15 மற்றும் 24 ஆகிய மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் எண் 6ன் கீழ் வருவார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் கிடைக்கும். துணையுடன் நேரத்தை செலவிட முடியாமல் போகும். எனவே ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு சிறப்பாக அமைய விரும்பினால் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை மாதம் முழுவதும் அணியுங்கள்.
எண் 7
எண் கணிதத்தின் படி, 7, 16 மற்றும் 25 ஆகிய மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் எண் 7ன் கீழ் வருவார்கள். இந்த தேதியில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் சிரமமில்லாமல் லக்குகளை அடைவார்கள். பணியிடத்தில் அமைதியை காண்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மொத்தத்தில் மாதம் முழுவதும் இவர்களுக்கு சிறப்பாக அமையும். ஆனாலும் ஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் பாதுகாப்பாக மற்றும் இன்னும் சிறப்பாக இருக்க விரும்பினால், செவ்வாய் மற்றும் சனிக்கிழமை அன்று அனுமான் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும்.
எண் 8
எண் கணிதத்தின் படி, 8, 17 மற்றும் 26 ஆகிய மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் எண் 8ன் கீழ் வருவார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இந்த தேதியில் பிறந்தவர்களின் கனவு நினைவாகும். வியாபாரிகளுக்கு இம்மாதம் அதிர்ஷ்த்தின் மாதமாகும். இம்மாதத்தில் புதிய தொழில் தொடங்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த தேதியில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமையில் விநாயகருக்கு இனிப்புகளை படைத்து வழிபட்டால் மாதம் முழுவதும் சிறப்பாக இருக்கும்.
எண் 9
எண் கணிதத்தின் படி, 9, 18 மற்றும் 27 ஆகிய மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் எண் 9ன் கீழ் வருவார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக அமையும். வேலையை முழு கவனத்துடன் செய்தல் வெற்றியை காண்பீர்கள் பணம் குவியும். திருமணம் ஆகாதவர்கள் தொழிலில் கவனம் செலுத்தினால் வெற்றி உறுதி. ஆனாலும் நீங்கள் இம்மாதம் முழுவதும் சிறப்பாக இருக்க விரும்பினால் சிவலிங்கத்திற்கு சர்க்கரை கலந்த தண்ணீரை வழங்க வேண்டும்.