- Home
- Astrology
- Birth Date: 1ஆம் தேதி பிறந்தவங்களா நீங்க? உங்களுக்கும் பணத்துக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கு
Birth Date: 1ஆம் தேதி பிறந்தவங்களா நீங்க? உங்களுக்கும் பணத்துக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கு
எண் கணிதத்தின் படி, எண் 1இல் பிறந்தவர்களின் குண நலன்கள், பலம் பலவீனம், காதல் வாழ்க்கை மற்றும் அதிஷ்டம் எப்படி அமையும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Number 1 in Numerology Prediction
எண் கணிதம் என்பது ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது குண நலன்கள், ஆளுமை, எதிர்கால வாழ்க்கை போன்ற அனைத்தையும் கணித்துவிட முடியும். அந்த வகையில் எண் கணிதத்தின் அடிப்படையில், எந்த மாதத்திலும் எண் 1இல் பிறந்தவர்களின் குண நலன்கள் வளம் பலவீனம், வேலை, தொழில் மற்றும் அவரது கால்தல் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
எண் 1
எண் கணிதத்தின் படி, எண் 1 முதல் 9 வரையிலான ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குறிப்பிட்ட மற்றும் தனித்துவமான குணநலன்கள் இருக்கும். மேலும் அந்த ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தாக்கம் மற்றும் அதன் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் எண் 1இன் கீழ் எண் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய எண்கள் வரும். இந்த எண்ணிகளில் பிறந்தவர்களிடம் நேர்மறையான ஆற்றல் அதிகமாகவே இருக்கும். இவர்கள் மீது சூரிய பகவானின் அருள் நிறைந்திருக்கும். சிம்ம ராசியின் அதிபதி சூரியன்.
இயல்பு:
எண் கணிதத்தின் படி 1, 10, 19 மற்றும் 28 ஆகிய எண்களில் பிறந்தவர்களை சூரிய பகவான் சிறப்பாக வழிநடத்துவார். இவர்கள் சிறப்பான ஆளுமைத் திறன் உடையவர்கள். இவர்களிடம் மன உறுதி, கட்டளையிடும், சிறப்பான கட்டுப்பாடு மற்றும் தலைமைத்துவ பண்புகள் நிறைந்து இருக்கும். இவர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையால் எப்பேர்ப்பட்ட கடினமான வேலையையும் சுலபமாக கையாளுவார்கள். சூரிய பகவானின் தாக்கத்தால் இவர்கள் பிறரை ஆள முயற்சிப்பார்கள்.
வேலை
எண் கணிதத்தின் படி, இந்த நான்கு எண்களில் பிறந்தவர்களிடம் தலைமைத்துவம் அதிகமாக இருப்பதால் பிறரிடம் அடிபணிந்து செல்ல மாட்டார்கள். இதனால் இவர்கள் சொந்த தொழில் செய்து அதில் ராஜாவாக இருக்க விரும்புவார்கள். மேலும் இவர்கள் தங்களுக்கென ஒரு சொந்த தொழில், வியாபாரத் செய்து அதில் சிறப்பாக செயல்படுவார்கள். இவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் நல்லா யோசித்து செயல்படுவார்கள்.
இந்த எண்களில் பிறந்தவர்களிடம் ஆக்கபூர்வமான சிந்தனை அதிகமாக இருப்பதாலும், இவர்களின் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, வலிமை போன்ற பல காரணங்கள் இவர்கள் தங்களது வாழ்க்கையில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
என்ன தொழில்?
எண் 1ல் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள். எனவே, இவர்கள் தங்களது தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான கடினமாக முயற்சிப்பார்கள். இவர்கள் அரசு வேலையில் பெரிய அதிகாரியாக வர வாய்ப்பு அதிகம் உள்ளன. மேலும் சிறந்த தொழில் அதிபராக கூட வரலாம். இவர்கள் நல்ல தலைவராகவும், அரசியல் வாதியாகவும் வரலாம்.
அதிஷ்ட நிறம்
எண் கணிதத்தின்படி எண் இல் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட நிறம், ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு மற்றும் பழுப்பு ஆகும்.