Birth Date: உங்க பிறந்த தேதி இதுவா? அப்ப கண்டிப்பா சொந்த வீடு வாங்கிடுவீங்க!!
எண் கணிதத்தின்படி, எந்த தேதியில் பிறந்தவர்கள் சொந்த வீடு வாங்க வாய்ப்பு அதிகம் இருக்கு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நடுத்தர மக்களின் ஒவ்வொருவரின் கனவு சொந்தமாக வீடு வாங்குவது. அந்த வீட்டில் தங்களுக்கு பிரியமானவர்களுடன் வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையை செலவிடலாம். ஆனால் இந்த கொடுப்பினை எல்லோருக்கும் அமைவதில்லை. சிலர் ராப்பகலா கடினமாக உழைத்தால் மட்டுமே சொந்த வீட்டை வாங்க முடிகிறது. சிலரோ எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற அவர்களின் கனவு வெறும் கனவாகவே மட்டுமே இருக்கிறது.
ஆனால் எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு சொந்த வீடு வாங்க அல்லது கட்டுவதற்கான அதிர்ஷ்டம் உள்ளன. அதில் உங்கள் பிறந்த தேதி இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு வீடு கட்ட அல்லது வாங்க அதிஷ்டம் இருக்கு?
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் நிலம், வீடு அல்லது சொத்துகளுடன் வலுவான சீரமைப்புடன் இருப்பார்கள் என்று எண் கணிதம் கூறுகிறது. அந்த வகையில் எண் கணிதத்தின் படி எந்த மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நிச்சயமாக ரொம்பவே அதிர்ஷ்டசாலியாக கருதப்படுவார்கள். இவர்களுக்கு சொந்த வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் யோகம் இருக்கிறது. இவர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இவர்களால் குடும்பத்தில் வறுமை வராது. இந்த தேதியில் பிறந்தவர்களின் அதிபதி சந்திரன் எனது இவர்கள் ரொம்பவே அதிர்ஷ்டசாலியாவார்கள். ஏனெனில் இவர்கள் வறுமையை செல்வமாக மாற்றக்கூடியவர்கள்.
எண்கள் 2, 4, 6, அல்லது 8
எண் கணிதத்தின் படி, ஒருவிரது பிறந்த தேதியின் கூட்டுத்தொகையானது இந்த நான்கு எண்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் அந்த ஆண்டானது அவர்களுக்கு யோகா ஆண்டாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுகளில் இவர்கள் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று நம்பப்படுகிறது.
ஆகவே சொந்த வீடு வாங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தங்களது பிறந்த தேதியை அறிந்து எண் கணிதத்தின் படி தங்களது அதிர்ஷ்ட தேதியை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட்டால் வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் யோகம் விரைவில் கைகூடும்.