- Home
- Astrology
- கோபத்தின் உச்சிக்கே செல்லும் 9 கிரகங்கள்.! அடுத்த 8 நாட்கள் 5 ராசிகளுக்கு கஷ்டம் மேல் கஷ்டம் வரப்போகுது.!
கோபத்தின் உச்சிக்கே செல்லும் 9 கிரகங்கள்.! அடுத்த 8 நாட்கள் 5 ராசிகளுக்கு கஷ்டம் மேல் கஷ்டம் வரப்போகுது.!
Holashtak 2026 : ஜோதிடத்தின்படி, இன்று (பிப்ரவரி 24) ஹோலாஷ்டக் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஐந்து ராசிக்காரர்கள் எட்டு நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

Holashtak 2026
வேத நாட்காட்டியின்படி, ஹோலாஷ்டக் பிப்ரவரி 24 அன்று தொடங்கியுள்ளது. ஹோலாஷ்டக் என்பது ஹோலி பண்டிகைக்கு முந்தைய எட்டு நாட்களை குறிக்கும் ஒரு அசுப காலமாகும். இந்த எட்டு நாட்களில், சூரியன், சனி, குரு, புதன், சுக்கிரன், ராகு, கேது, செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய அனைத்து கிரகங்களும் கோபமான நிலையில் இருக்கும். இது சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஹோலாஷ்டக் காலத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிரகங்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்போம்.
மிதுனம்
ஜோதிடப்படி, ஹோலாஷ்டக்கின் கடைசி நாட்களில் குரு பகவான் வக்ர நிலையில் இருப்பார். இதனால், மிதுன ராசிக்காரர்கள் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ராகு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால், நிதி சிக்கல்களை சந்திப்பீர்கள். கடன் வாங்க நேரிடலாம். மனக் குழப்பமும், பல மன உளைச்சல்களும் ஏற்படலாம்.
கடகம்
ஜோதிடப்படி, கடக ராசிக்காரர்கள் ஹோலாஷ்டக் தொடக்கத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மேலும், வாகனங்களை கவனமாகப் பயன்படுத்தவும். விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஹோலாஷ்டக் காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்தக் காலத்தில், தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வேலையில் நம்பிக்கையுடன் செயல்பட முடியாது. கேது உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால், எந்த வேலையிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
கும்பம்
ஜோதிடப்படி, கும்ப ராசிக்காரர்கள் தற்போது ஏழரை சனியின் தாக்கத்தில் உள்ளனர். கும்பத்தில் அங்காரக யோகமும் உருவாகிறது. ஹோலாஷ்டக் காலத்தில், ராசி அதிபதி சனி அஸ்தமன நிலையில் இருப்பார். இதனால், கும்ப ராசிக்காரர்கள் தொழில் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்ப வாழ்க்கையிலும் தவறான புரிதல்கள் ஏற்படலாம்.
மீனம்
ஜோதிடப்படி, மீன ராசிக்காரர்கள் இந்த நாட்களில் மனக் குழப்பத்தை சந்திக்கலாம். அவர்களின் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும். இந்தக் காலத்தில், குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி இருப்பது போல் உணரலாம். கடன் வாங்க நினைத்தால், சிறிது காலத்திற்கு திட்டங்களை ஒத்திப்போடுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

