Madhan Bob Passed away: “ஏஆர் ரகுமானின் குரு” குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார்
நகைச்சுவை நடிகர், இசை அமைப்பாளர், தொலைக்காட்சி நடுவர் என பன்முக திறமை கொண்ட நடிகர் மதன் பாப் காலமானார்.

மதன் பாப்
எஸ். கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் மதன் பாப் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பரவலாக அறியப்பட்டவர். 1953 அக்டோபர் 19 அன்று சென்னையில் பிறந்த இவர், தனது திரைப்பட வாழ்க்கையை இசையமைப்பாளராகத் தொடங்கினார். பின்னர், 1984-இல் பாலு மகேந்திராவின் நீங்கள் கேட்டவை திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இவரது தனித்துவமான முகபாவனைகள், சிரிப்பு மற்றும் கண்களை உருட்டும் நடிப்பு, காகா ராதாகிருஷ்ணனைப் பின்பற்றி உருவாக்கப்பட்டவை.
600க்கும் மேற்பட்ட படங்களில் மதன் பாப்
நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர், தொலைக்காட்சி நடுவர் என பன்முக திறமைக் கொண்ட இவர் தேவர் மகன், பம்மல் கே. சம்பந்தம், யாய்! நீ ரொம்ப அழகா இருக்கே, மழை, சுறா உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்தவர்.
இசையமைப்பாளராக
எம்.எஸ். விஸ்வநாதன், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர். மதன் பாப் மெல்லிசைக் குழு என்ற இசைக் குழுவை நிறுவி நிகழ்ச்சிகள் நடத்தினார். இப்படி பன்முக தன்மை கொண்ட மதன் பாப் சென்னையில் இன்று காலமானார்.