- Home
- Tamil Nadu News
- உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன்..! அன்புமணியை பகிரங்கமாக போட்டு தாக்கிய ராமதாஸ்
உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன்..! அன்புமணியை பகிரங்கமாக போட்டு தாக்கிய ராமதாஸ்
உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் இருக்கிறார் என்றால் அது அன்புமணியாக மட்டுமே இருக்க முடியும் என்று கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பை கிளப்பி உள்ளார்.

பாமக.வில் மோதல்
பாமக.வில் தந்தை, மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் முற்றக் கொண்டே செல்கிறது. இந்த பிரச்சினையின் இடையே, தைலாபுரத்தில் தனது இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி அமைக்கப்பட்டு தனது செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பினார். ஒட்டு கேட்பு கருவி வைக்கப்பட்டது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புகாா் தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார்?
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் ஒட்டு கேட்பு கருவியை வைத்தது யார் என்று தமக்கு தெரியும் என கூறி பரபரப்பை எகிற விட்டுள்ளார். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் இருக்கிறார் என்றால் அது அன்புமணியாக மட்டும் தான் இருக்க முடியும். எனது புகார் தொடர்பாக விழுப்புரம் காவல் துறையினர், சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தனியார் விசாரணைக் குழு ஒன்றையும் நான் அமைத்துள்ளேன். இந்த குழு காவல் துறையினருக்கும், சைபர் கிரைம் போலீசாருக்கும் உதவியாக செயல்படுவார்கள்” என்றார்.
நிறுவனரும் நானே, தலைவரும் நானே - ராமதாஸ்
மேலும் அவர் கூறுகையில், “அண்மையில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு செயலாளர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆலோசனை நடைபெறும் தினத்திற்கு முந்தைய நாள் நிர்வாகிகளை நேரியாகத் தொடர்பு கொண்ட அன்புமணி கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது எனக் கூறி மிரட்டினார். அதன் படி கூட்டத்தில் பங்கேற்றகாத மாவட்டச் செயலாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நான் நியமித்துள்ளேன். கட்சியின் நிறுவனரும், தலைவருமான நான் கூறுவதை அவர் எப்படி தடுக்க முடியும்? இந்த மாதம் 10ம் தேதி பெண்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய வகையில் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 2 முதல் 3 லட்சம் மகளிர் கலந்து கொள்ள உள்ளனர்” என்றார்.