- Home
- Tamil Nadu News
- சரண் விடுப்பு.! அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கும் குஷியான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு
சரண் விடுப்பு.! அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கும் குஷியான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு
தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சரண் விடுப்பு சலுகை மீண்டும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 8 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். மேலும், இந்த சலுகை பொதுத்துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

அரசு ஊழியர்கள் தான் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய முக்கிய பாலமாக உள்ளனர். எனவே அரசு ஊழியர்களுக்காக பல்வேறு திட்டங்கள் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 53% அகவிலைப்படியைப் போலவே, தமிழக அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள், 53% DA உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) பதிலாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக அரசு குழு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படியைல பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாக சரண் விடுப்பு முக்கிய கோரிக்கையாக உள்ளது. அரசு ஊழியர்கள் தாங்கள் விடுப்பு எடுக்காத நாட்களை ஒப்படைத்து அதற்கு பணமாக பெறமுடியும், அந்த வகையில் ஒரு ஊழியர் தனது சம்பாதித்த விடுப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்களை சரண் செய்யலாம்.
இதற்கு ஈடாக, அந்த விடுப்பு நாட்களுக்கான சம்பளத்தை பணமாகப் பெறலாம். அந்த வகையில் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த சரண் விடுப்பு திட்டம் 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில், கடும் நிதி நெருக்கடி காரணமாக ஈட்டிய விடுப்பை சரண் செய்து, பணப்பலன் பெறும் முறை நிறுத்தப்பட்டது.
இதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து 2026 ஆம் ஆண்டு முதல் மீண்டும் துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், நடப்பாண்டே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்ததையடுத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சரண் விடுப்பு பணப்பலன்களை, அக்டோபர் 1ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பொறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், சரண் விடுப்பு திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி ஓராண்டில், 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து, அதற்கான ஊதியத்தை அரசு ஊழியர்கள் பெற முடியும். இந்த நிலையில் இந்த திட்டமானது அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல பொதுத்துறை ஊழியர்களும் பயன்பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.